(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரசின் 2025 ஜனவரி 1 ஆம் திகதியிலிருந்து 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் திகதி வரையான 4 மாத காலப் பகுதிக்கான கணக்கு வாக்குப்பதிவாக 9,60,500 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்களுக்கென 20801 கோடியே 95,75000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த நிதியிலிருந்து ஜனாதிபதியின் செயல்முறை மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக 127 கோடியே 99,40000 ரூபாவும் பிரதமர் அலுவலகத்துக்காக 37 கோடியே 80 இலட்சம் ரூபாவும் நிதி அமைச்சுக்காக 18603 கோடியே 18,12000 ரூபாவும் பாதுகாப்பு அமைச்சுக்காக 14295கோடியே 50 இலட்சம் ரூபாவும் நீதி,தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்காக 1727 கோடியே 31,60000 ரூபாவும் சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சுக்காக 16199 கோடியே 99,98000 ரூபாவும் கல்வி,உயர்கல்வி அமைச்சுக்காக 9200 கோடி ரூபாவும் பொது நிர்வாக ,மாகாணசபைகள் அமைச்சுக்காக 17047 கோடியே 64,15000 ரூபாவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சுக்காக 6506 கோடியே 45,75000 ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதேபோன்று புத்தசாசன சமய கலாசார அமைச்சுக்கு 323கோடியே 63 இலட்சம் ரூபாவும் வெளிநாட்டு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சுக்கு 592 கோடியே 73,50000 ரூபாவும் வர்த்தக வாணிப அமைச்சுக்கு 88 கோடியே 57 இலட்சம் ரூபாவும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சுக்கு 22007கோடியே 50 இலட்சம் ரூபாவும் கமத்தொழில்,கால்நடை,காணி ,நீர்பாசன அமைச்சுக்கு 6736 கோடியே 10 இலட்சம் ரூபாவும் வலுசக்தி அமைச்சுக்கு 4330கோடியே 5,50000 ரூபாவும் நகர அபிவிருத்தி,நிர்மாணம், வீடமைப்பு அமைச்சுக்கு 1719 கோடியே 49,20000 ரூபாவும் பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு அமைச்சுக்கு 365 கோடியே 20 இலட்சம் ரூபாவும் மிகுதி ஏனைய அமைச்சுகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM