19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட்: ஏ குழுவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இலகுவான வெற்றி

Published By: Vishnu

04 Dec, 2024 | 08:13 PM
image

(நெவில் அன்தனி)

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட்டின் இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் இலங்கை - இந்திய அணிகள் விளையாடவுள்ளன. முதலாவது அரை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை பங்களாதேஷ் எதிர்த்தாடும்.

இன்று நடைபெற்ற ஏ குழுவுக்கான கடைசி இரண்டு போட்டிகளில் பாகிஸ்தானும் இந்தியாவும் வெற்றிபெற்றதை அடுத்து அரை இறுதிப் போட்டிகளில் எந்தெந்த  அணிகளை   எந்தெந்த  அணிகள்   எதிர்த்தாடும் என்பது தீர்மானிக்கப்பட்டது.

எட்டு அணிகள் பங்குபற்றிய 19 வயதுக்குட்பட்ட ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பி குழுவில் இடம்பெற்ற இலங்கையும் ஏ குழுவில் இடம்பெற்ற பாகிஸ்தானும் மாத்திரமே தோல்வி அடையாத அணிகளாக அரை இறுதிகளில் விளையாட தகுதிபெற்றன.

இந்த இரண்டு குழுக்களிலிருந்து முறையே பங்களாதேஷும் இந்தியாவும் தலா ஒரு தோல்வியுடன் அரை இறுதிக்கு முன்னேறின.

இந்தியா எதிர் ஐக்கிய அரபு இராச்சியம்

இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கும் இடையில் ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற ஏ குழு போட்டியில் இந்தியா 10 விக்கெட்களால் இலகுவாக வெற்றிபெற்றது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சியம் 44 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 137 ஓட்டங்களைப் பெற்றது.

இதில் முஹம்மத் ரெயான் (36), அக்சத் ராய் (26) ஆகிய இருவரே 25 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

பந்துவீச்சில் யூதாஹித் குஹா 15 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 16.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 143 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

வைபவ் சூர்யாவன்ஷி 46 பந்துகளில் 3 பவுண்டறிகள், 6 சிக்ஸ்கள் உட்பட 76 ஓட்டங்களுடனும் அயுஷ் முஹாத்ரி 67 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ்

துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற மற்றைய ஏ குழு போட்டியில் ஜப்பானை 180 ஓட்டங்களால் பாகிஸ்தான் மிக இலகுவாக வெற்றிகொண்டது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 243 ஓட்டங்களைப் பெற்றது.

முஹம்மத் ரியாஸுல்லா ஆட்டம் இழக்காமல் 66 ஓட்டங்களைவும் ஷாஹ்பாஸ் கான் 45 ஓட்டங்களையும் பஹாம் உல் ஹக் 34 ஓட்டங்களையும் அஹ்மத் ஹுசெய்ன் 30 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் நிஹார் பாமர் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜப்பான் 28.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 63 ஓட்டங்களைப் பெற்றது.

நிஹார் பாமர் மாத்திரமே (25) இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெற்றார். ஜப்பானின் மொத்த எண்ணிக்கையில் இரண்டாவது அதிகபட்ச எண்ணிக்கையாக 10 உதிரிகள் அமைந்திருந்தது.

பந்துவீச்சில் மொஹம்மத் ஹுசெய்வா 8 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

அரை இறுதிப் போட்டிகள் நாளை 

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அரை இறுதிப் போட்டி ஷார்ஜாவிலும் பாகிஸ்தானுக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான அரை இறுதிப் போட்டி துபாயிலும் நாளை நடைபெறவுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூஸிலாந்துடனான டெஸ்டை வெற்றி தோல்வியின்றி முடித்துக்கொண்டது...

2025-12-06 17:25:02
news-image

இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு...

2025-12-05 23:21:18
news-image

வரலாற்றில் மிகப் பெரிய பீபா உலகக்...

2025-12-05 20:17:23
news-image

531 ஓட்டங்கள் என்ற இமாலய வெற்றி...

2025-12-05 14:56:49
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது இளையோர் 3 நாள்...

2025-12-05 14:00:08
news-image

இலங்கை வீரர் பெத்தும் நிஸ்ஸன்கவின் அரைச்...

2025-12-05 13:01:48
news-image

இலங்கையை மீளக் கட்டி எழுப்பும் நிதிக்கு...

2025-12-04 19:47:32
news-image

மேற்கிந்தியத் தீவுகளுடனான டெஸ்டில் டொம் லெதம்,...

2025-12-04 15:39:58
news-image

லிவிங்ஸ்டோன் அதிரடி துடுப்பாட்டம்;  அபு தாபி...

2025-12-04 15:28:47
news-image

இந்தியாவுடனான 2ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியில்...

2025-12-04 04:52:56
news-image

இந்தியாவை பலமான நிலையில் இட்ட கோஹ்லி,...

2025-12-03 19:11:17
news-image

முதலாவது டெஸ்டின் இரண்டாம் நாள் ஆட்டத்தில்...

2025-12-03 15:31:31