தற்காலிக சிறுநீரக பாதிப்புக்கு நிவாரணமளிக்கும் நவீன சத்திர சிகிச்சை

Published By: Digital Desk 2

04 Dec, 2024 | 05:39 PM
image

எம்மில் சிலருக்கு இதய பாதிப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டிருப்பர். அதே தருணத்தில் வேறு சிலருக்கு கல்லீரல் பாதிப்பு மற்றும் நோய் தொற்று பாதிப்பு போன்றவை ஏற்பட்டு அவர்களும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டிருப்பார்கள். 

இவர்களுக்கு அவர்களுடைய உடலில் யூரியாவின் அளவு 200 என்ற எண்ணிக்கையை கடந்து அதிகமாக இருந்தாலும் அல்லது பொட்டாசியத்தின் அளவு ஆறு என்ற எண்ணிக்கையை விட கூடுதலாக இருந்தாலும் சிறுநீரகத்தின் செயல் திறன் பாதிக்கப்படும். இவர்களுக்கு திடீரென்று தற்காலிக சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு அதிகம். இந்த நிலையில் இவர்களுக்கு நவீன சிகிச்சை அறிமுகமாகி பலனளித்து வருவதாக வைத்தியர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

எம்முடைய சிறுநீரகங்கள் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் பணியை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. விவரிக்க இயலாத பல காரணங்களால் சிறுநீரகத்தின் செயல் திறனில் பாதிப்பு ஏற்பட்டால் உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றும் பணியில் தடை ஏற்படுகிறது. இதனால் ஆரோக்கியத்தில் பாரிய கேடு உண்டாகிறது. சிலருக்கு சிறுநீரக பாதிப்பு தற்காலிகமானதாகவும், சிலருக்கு நிரந்தரமானதாகவும் ஏற்படக்கூடும். 

இதயம், கல்லீரல் ஆகிய உறுப்புகளில் பாரிய பாதிப்பு ஏற்பட்டு, அவர்கள் சிகிச்சை பெறும் போது திடீரென்று  தற்காலிக சிறுநீரக பாதிப்பு ஏற்படுகிறது. இத்தகைய பாதிப்பு ஏற்பட்ட நோயாளிகளுக்கு சஸ்டெய்ன்ட் லோ, எஃபிசியன்ஸி டயாலிசிஸ் எனும் நவீன சிகிச்சை மூலம் பாதிப்பிற்கு நிவாரணம் வழங்கப்படுகிறது. 

இதுபோன்ற தருணங்களில் சிறுநீரகம் செய்யும் பணியை வைத்து நிபுணர்கள் பிரத்யேக கருவி மூலம் செயல்படுத்துவார்கள். நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும்போது அவர்களுடைய இரத்த அழுத்தம் இயல்பான அளவைவிட குறைவாக இருந்தாலோ அல்லது அவர்களுடைய இதயத்துடிப்பு இயல்பான அளவைவிட குறைவாக இருந்தாலோ இவர்களுக்கு சஸ்டெய்ன்ட் லோ, எஃபிசியன்ஸி டயாலிசிஸ் எனும் நவீன சிகிச்சையை மேற்கொண்டு நிவாரணம் வழங்குவார்கள். 

பொதுவாக இத்தகைய டயாலிசிஸ் நோயாளிகளின் தன்மையை பொறுத்து நான்கு மணி நேரம் முதல் ஆறு மணி நேரம் வரை மேற்கொள்வார்கள். இதனால் நோயாளிகள் தற்காலிக சிறுநீரக பாதிப்பிலிருந்து நிவாரணம் பெறுவார்கள்.

வைத்தியர் குரு பாலாஜி

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போஸ்ட் வைரல் ஓர்தரைடீஸ் எனும் காய்ச்சலுக்கு...

2025-01-22 17:01:32
news-image

வாய் வறட்சி எனும் உலர் வாய்...

2025-01-21 15:19:43
news-image

செபோர்ஹெக் டெர்மடிடிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2025-01-20 17:51:49
news-image

பிரஸ்பியோபியா எனும் பார்வை திறன் குறைபாட்டை...

2025-01-18 18:06:52
news-image

அதிகரித்து வரும் சிட்டிங் டிஸீஸ் பாதிப்பிலிருந்து...

2025-01-17 15:06:44
news-image

புல்லஸ் பெம்பிகொய்ட் - கொப்புளங்களில் திரவம்! 

2025-01-16 16:54:51
news-image

அறிகுறியற்ற மாரடைப்பும் சிகிச்சையும்

2025-01-15 17:42:27
news-image

நரம்பு வலிக்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-01-13 15:56:02
news-image

பியோஜெனிக் ஸ்போண்டிலோடிசிடிஸ் எனும் முதுகெலும்பு தொற்று...

2025-01-09 16:19:03
news-image

புல்லஸ் எம்பஸிமா எனும் நுரையீரல் நோய்...

2025-01-08 19:25:03
news-image

இன்சுலினோமா எனும் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2025-01-07 17:23:56
news-image

கார்டியோபல்மனரி உடற்பயிற்சி சோதனை - CPET...

2025-01-06 16:52:15