தமிழ் திரையுலகின் ஒப்பற்ற குணசித்திர நடிகரான குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'போத்தல் ராதா' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'நானா குடிகாரன்..' எனும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் உருவாகி வரும் 'போத்தல் ராதா 'எனும் திரைப்படத்தில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய், மாறன், அந்தோணி, பாரி இளவழகன், ஆறுமுக வேல், அபி ராமையா, ஜேபி குமார், கே எஸ் கர்ணா பிரசாத் , மாலதி அசோக் நவீன், சுகாசினி சஞ்சீவ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ரூபேஷ் ஷாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் பலூன் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பா. ரஞ்சித் மற்றும் டி. என் .அருண் பாலாஜி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
எதிர்வரும் இருபதாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற 'நானா குடிகாரன்..' எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் அறிவு எழுதி பாடியிருக்கிறார். இந்தப் பாடல் மது பிரியர்களை பற்றிய பாடல்களாக இருப்பதால் ஒரு பிரிவு ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM