வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் பிரத்தியேக குளியல் முறை

Published By: Digital Desk 2

04 Dec, 2024 | 05:33 PM
image

இன்றைய சூழலில் பாடசாலையில் செல்லும் மாணவ மாணவிகள் முதல் அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று வீட்டில் முதுமை காலத்தை கடத்தி வரும் மூத்த குடும்ப உறுப்பினர்கள் வரை விரும்பும் ஒரே விடயம் மாற்றம். வாழ்வில் இந்த தருணத்தில் ஏதேனும் மாற்றம் நிகழ்ந்து விடாதா? என ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். 

மாற்றம் என்பது மாறாதது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் சில வினைகள் நடைபெற வேண்டும் என்றால் அதற்குரிய தூண்டுதல் நடைபெற வேண்டும். அதாவது எமக்குள் மாற்றம் நிகழ வேண்டும் என கருதினால் அதற்கு முதலில் நாம் எம்மை தகுதிப்படுத்தி கொள்ள வேண்டும். மேலும் மாற்றம் ஏற்படுவதற்கான சூழலையும் உருவாக்கிக் கொள்ள வேண்டும். 

இதற்காக எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் எளிமையாக நாளாந்தம் நாம் மேற்கொள்ளும் கடமைகளில் இதனை புகுத்தி வழிகாட்டி இருக்கிறார்கள். அதாவது நீராடும் போது சில பிரத்யேக பொருட்களைக் கொண்டு நீராடினால் உங்களுடைய புறம் மட்டுமல்ல அகமும் அகத்தை ஆக்கிரமித்திருக்கும் ஆரா எனும் சூட்சம ஆற்றலும் புத்தாக்கம் செய்யப்பட்டு மாற்றத்தை உண்டாக்கும் என குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இதற்கு தேவையான பொருட்கள் : பால், பச்சை கற்பூரம் , ஏலக்காய் பொடி , கல் உப்பு ,மஞ்சள் தூள்.

நீங்கள் பிறந்த கிழமை அல்லது சனிக்கிழமையை தெரிவு செய்து கொள்ளுங்கள். காலையில் எழுந்ததும் நீங்கள் நீராடும் நீரில் சிறிதளவு கல் உப்பை கலந்து விடுங்கள். அந்த நீரில் முதலில் நீராடுங்கள். அதன் பிறகு குளியலின் இறுதி கட்டத்தில் ஒரு சிறிய அளவுள்ள கோப்பையில் சிட்டிகை அளவு பச்சை கற்பூரம் ,சிறிதளவு பால் , சிறிதளவு ஏலக்காய் பொடி,  சிறிதளவு மஞ்சள் தூள் ஆகியவற்றை கலந்து வைத்துக் கொள்ளுங்கள். 

இந்த நீரை உங்களின் குளியலின் இறுதி கட்டத்தின் போது பயன்படுத்துங்கள். பிறகு உடனடியாக ஈர உடம்பை துடைக்காமல் ஐந்து முதல் ஆறு நிமிடம் வரை பொறுமை காத்து, மனதில் 'மாற்றம் நிகழ வேண்டும். 

அவை எமக்கு சாதகமானதாகவும் அதிக பலனளிக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும்' என நினைத்துக் கொள்ளுங்கள். தங்களுக்கு எத்தகைய மாற்றம் வேண்டும் என்பது குறித்த கற்பனையையும் செய்து கொள்ளலாம். அதன் பிறகு குளியலை நிறைவு செய்துவிட்டு ஈரம் நிறைந்த ஆடையுடன் பூஜை அறைக்கு சென்று தீபமேற்றி வழிபடுங்கள். 

இதனை ஆண்களும் செய்யலாம். பெண்களும் செய்யலாம். பெண்களாக இருந்தால் அல்லது பெண்மணிகளாக இருந்தால் வெள்ளிக்கிழமையை தெரிவு செய்து கொள்ளுங்கள். இப்படி நீராடும் போது இதனை தொடர்ச்சியாக கடைப்பிடிக்கும் போது நீங்கள் விரும்பிய மாற்றம் உங்களுக்கான மாற்றம் விரைவில் ஏற்படும்.

இதனை உள்ளுணர்வாலும் உணர இயலும். நடவடிக்கையில் வெளிப்படும். மற்றவர்களின் விமர்சனங்களின் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம். இந்த மாற்றங்கள் உங்களுடைய வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் ஆதாரமானவை என்பதை தெரிந்து கொண்டு, அதனை இறுக பற்றி வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள்.

தொகுப்பு : சுபயோக தாசன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாவங்கள் நீக்குவதற்கான எளிய வழிமுறை..!?

2025-01-22 17:24:15
news-image

உங்களுக்கு கூர்ம யோகம் இருக்கிறதா..!?

2025-01-21 15:49:42
news-image

அபிஷேகம் செய்வதன் மூலம் பலன் பெறுவது...

2025-01-20 17:52:05
news-image

கடன் சுமை குறைவதற்கான எளிய பரிகாரம்...!?

2025-01-18 22:11:20
news-image

வருவாயை அதிகரித்துக் கொள்வதற்கான சூட்சுமமான வழிமுறை..!?

2025-01-17 17:01:03
news-image

தொழிலில் ஏற்படும் தடையை நீக்குவதற்கான எளிய...

2025-01-16 20:12:57
news-image

செல்லப் பிராணியை எப்போது வாங்கலாம்?

2025-01-15 17:39:12
news-image

ஒவ்வொருவரும் நாளாந்தம் பின்பற்ற வேண்டிய ஆன்மீக...

2025-01-13 15:56:39
news-image

குலதெய்வத்தின் அருளை பெறுவதற்கு எளிமையான வழிமுறை..!?

2025-01-09 15:26:03
news-image

எதிர்மறை ஆற்றலை அழித்து செல்வத்தை குவிக்கும்...

2025-01-08 19:26:11
news-image

கல்வியில் தேர்ச்சி பெறுவதற்கான எளிய குறிப்புகள்..!?

2025-01-07 16:03:17
news-image

ஆகமி கிரகத்தின் அருளை பெறுவதற்கான சூட்சம...

2025-01-06 16:36:08