(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
தாஜுதீனின் கொலைக்கு நீதியை பெற்றுத்தருவதாக தெரிவித்த ஜனாதிபதி தற்போது அதுதொடர்பான வழக்கை முன்னெடுத்துச்செல்ல தேவையான தகவல்களை வழங்காமல் மறுத்துவந்த அதிகாரியை தனது ஆலாேசகராக நியமித்துள்ளார் என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (04) இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான இரண்டாம் நாள் விவாத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
சட்டத்தின் ஆட்சி தொடர்பில் ஜனாதிபதி தனது கொள்கை விளக்க உரையில் தெரிவித்தருந்தார். அதேபோன்று தேர்தல் பிரசார கூட்டங்களின்போது ஜனாதிபதி தெரிவித்த 5 வழக்குகள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் தாஜுதீனின் வழக்கு. தாஜுதீனின் வழக்கு தொடர்பில் அவர் இந்த சபையின் உறுப்பினராக இருந்துகொண்டு பல விடயங்களை தெரிவித்திருந்தார்.
தாஜுதீனின் வழக்கை முன்னெடுத்துச்செல்ல முடியாமல் போனமைக்கான காரணத்தையும் ஜனாதிபதி தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்.
அதனால் இது தொடர்பில் சில விடயங்களை ஜனாதிபதிக்கு நினைவூட்ட விரும்புகிறேன். அதாவது தாஜுதீனின் வழக்கை முன்னெடுத்துச்செல்ல தேவையான தகவல்களை அன்று டயலாெங் நிறுவனம் பெற்றுக்கொடுக்கவில்லை.
முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர திஸாநாயக்க பயன்படுத்திய தொலைபேசி எண்ணை டயலாெங் நிறுவனம் பெற்றுக்காெடுக்கவில்லை, அதேபோன்று அன்று இருந்த திடீர் மருத்துவ பரிசோதகரான ஆனந்த சமரசேகர பயன்படுத்திய தொலைபேசியில் இருந்த தகவல்களை பெற்றுக்கொடுக்கவில்லை.
அந்த அறிக்கைகளை பெற்றுக்கொடுக்காத, அன்று டயலொக் நிறுவனத்தின் பிரதானி ஹாங்ஸ் விஜேசூரிய இன்று டிஜிடல் பொருளாதாரம் தொடர்பில் ஜனாதிபதியின் ஆலோசகராக இருக்கிறார்.
தாஜுதீனின் கொலையை கண்டுபிடிக்க முடியாமல்போனமைக்கான காரணம், டயலொங் நிறுவனத்தின் பிரதானி என்றவகையில் ஹாங்விஜேசூரிய வழங்க வேண்டிய ஒத்துழைப்பை வழங்காமல் இருந்தமையாகும்.
அன்றைய கொலைகார ஆட்சியாளர்களுடன் அவருக்கு சிறந்த தொடர்பு இருந்தது. அதனால் வேண்டுமென்றே இந்த வழக்கை கொண்டுசெல்லாமல் தடுக்க டயலொங் நிறுவனத்தின் ஒத்துழைப்பு வழங்காமல் தடுத்து வந்தார். அவரை தற்போது ஜனாதிபதியின் டிஜிடல் பொருளாதாரத்தின் ஆலாேசகராக நியமித்திருக்கிறது.
அதேபோன்று சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் ஆலாேசகராக நியமிக்கப்பட்டிருக்கும் அதிகாரி, மஹிந்த ராஜபக்ஷ் ஆட்சியில் பாெலிஸுக்குள் பாரிய ஊழல் மோசடிகளுக்கு ஆளான, பாரியளவில் குற்றச்சாட்டுக்கள் உடைய ஒருவர்.
அரசாங்கம் மாற்றம் ஒன்றை ஏற்படுத்தி, சிறந்த பயணத்தை செல்ல நடவடிக்கை எடுத்து வருகிறது. அவ்வாறான நிலையில் இவ்வாறான பாரிய குற்றச்சாட்டுகள் உடையவர்களை உயர் பதவிகளுக்கு நியமித்துக்கொண்டு, அரசாங்கம் எவ்வாறு அந்த பயணத்தை செல்ல முடியும் என்பதே எமது கேள்வி.
அதேபோன்று அபிவிருத்தி அதிகாரிகள் கொழும்பில் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது அவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் அந்த அதிகாரிகள், ஒருவரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தார்கள். அந்த நபர் இராணுவ புலனாய்வு பிரிவின் அதிகாரி என இனம் கண்டிருப்பதாக ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது. பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் இந்த செய்தி மிகவும் பாரதூரமானதாகும். இதன் உண்மை தன்மை தொடர்பில் அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.
ஏனெனில் கடந்தகால ஈஸ்டர் தாக்குதலில் சம்பந்தப்பட்டிருப்பதாக இராணுவ புலனாய்வு தொடர்பில் பாரிய குற்றச்சாட்டு இருந்தது. அதனால் புதிய அரசாங்கம் என்றவகையில் அரசாங்கத்துக்குள் அரசாங்கம் என்ற விடயத்தை இன்னும் நீக்க வில்லையா? அதனையா அரசாங்கம் பின்பற்றி வருகிறது என கேட்கிறேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM