ஐடிஎம் நேஷன்ஸ் கேம்பஸ் இன்டர்நேஷனில் 750க்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டதாரிகளாக தெரிவு

Published By: Digital Desk 7

04 Dec, 2024 | 05:08 PM
image

ஐடிஎம் நேஷன்ஸ் கேம்பஸ் இன்டர்நேஷனல் (IDMNC) அதன் வருடாந்திர பட்டமளிப்பு விழாவை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நவம்பர் 30ஆம் திகதி சனிக்கிழமை விமர்சையாக நடத்தியது.

IDMNC இன்டர்நேஷனல் கேம்பஸின் தலைவர் கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தியின் வழிகாட்டுதலின் கீழ், இவ்விழாவில் 750க்கும் மேற்பட்ட பட்டதாரர்களின் சாதனைகள் கௌரவிக்கப்படன. 

சட்டத்துறை உட்பட பல்வேறு துறைகளில் இளமானி மற்றும் முதுமானி பட்டங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இவ்விழாவுக்கு பிரதம அதிதியாக ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முன்னாள் தலைவர் மற்றும் ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் மூத்த பேராசிரியர் சுதந்த லியனகே தலைமை விருந்தினராக கலந்துகொண்டார்.

விருந்தினராக பேராசிரியர் சாரா வில்லியம்ஸ், பக்கிங்ஹம்ஷைர் நியூ யூனிவர்சிட்டியின் வணிக மற்றும் சட்டபீடத்தின் தலைவர் மற்றும் பல்கலைக்கழக கூட்டாண்மைகளின் தலைவர், நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

அத்தோடு, மிஸ்டர் மைக் மெக்டர்மோட், டாக்டர் டெனிஸ் கைட், பேராசிரியர் ஸைனி பேய், பேராசிரியர் சுக்நிந்தர் பனேசர் மற்றும் மிஸ்டர் அலன் கிளார்க் போன்ற பல முக்கியஸ்தர்களும் விருந்தினர்களாக கலந்துகொண்டனர். 

IDMNC இன்டர்நேஷனல் கேம்பஸ், பக்கிங்ஹம்ஷைர் நியூ யூனிவர்சிட்டி உள்ளிட்ட பல உலகப் பிரசித்தி பெற்ற கல்வி நிறுவனங்களுடன் இணைந்து சிறந்த கல்வியை வழங்கும் திறனுடன் விளங்குகிறது. செயற்கை நுட்ப கல்வி, மேலாண்மை, ஆசிரியர் கல்வி மற்றும் சட்டக் கல்வி போன்ற பல துறைகளில் மாணவர்களுக்கு UGC அங்கீகாரம் பெற்ற பட்டங்களை வழங்குகிறது.

40 ஆண்டுகளுக்கும் மேலாக IDMNC இன்டர்நேஷனல், இலங்கையின் உயர்கல்வித் துறையில் முன்னணி இடத்தை பெற்றுள்ளது. கல்வியில் சர்வதேச தரங்களை பின்பற்றுவதுடன், உலகளாவிய திறன் வளங்களை மாணவர்களுக்கு வழங்கியது அதன் சிறப்பாக அமைந்துள்ளது.

இந்த ஆண்டு பட்டமளிப்பு விழா IDMNC இன்டர்நேஷனலின் கல்வி மேம்பாட்டு மற்றும் எதிர்கால தலைவர்களை உருவாக்கும் உறுதியை மேலும் வலியுறுத்திய நிகழ்வாக அமைந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவின் 76 ஆவது குடியரசு தினத்தை...

2025-01-23 21:09:21
news-image

யாழ். பல்கலையில் 'த நெயில்' சஞ்சிகை...

2025-01-23 18:28:12
news-image

யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தின் 4ஆவது இளங்கலை...

2025-01-23 17:53:48
news-image

“கலாசூரி” வாசுகி ஜெகதீஸ்வரனின் நெறியாள்கையில் சஹானா...

2025-01-23 18:36:46
news-image

செலான் வங்கியின் சூரியப்பொங்கல்

2025-01-22 12:52:42
news-image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மாணவர் ஆய்வு...

2025-01-22 09:05:55
news-image

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்...

2025-01-21 17:48:32
news-image

புனித குர்ஆன் மனனப் போட்டியின் இரண்டாம்...

2025-01-21 11:13:46
news-image

'அடையாளம்' கவிதை நூல் வெளியீடு

2025-01-20 15:49:31
news-image

கொழும்பு இந்து மகளிர் சங்கத்தினர் நடத்திய...

2025-01-20 15:24:39
news-image

காங்கேசன்துறை தையிட்டி கணையவிற் பிள்ளையார் ஆலய...

2025-01-20 13:13:22
news-image

கொட்டாஞ்சேனை அருள்மிகு ஸ்ரீ வரதராஜ விநாயகர்...

2025-01-19 20:03:17