தென்கொரிய பாராளுமன்றத்தின் கட்சிகளுக்கிடையிலான ஒற்றுமை சர்வதேசத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டு - ரணில்

05 Dec, 2024 | 12:09 AM
image

(எம்.மனோசித்ரா)

அமுல்படுத்தப்பட்டிருந்த அவசரகால இராணுவ சட்டத்தை தளர்த்துவதற்கு அந்நாட்டு பாராளுமன்றம் நடவடிக்கை எடுத்தமை வரவேற்கத்தக்கது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :

கொரிய பாராளுமன்றம் இராணுவச் சட்டத்தை தளர்த்துவதற்கான யோசனையை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியமை வரவேற்கத்தக்கது. 

பாராளுமன்றத்தின் விரைவான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் பாராட்டப்பட வேண்டும்.

ஜனாதிபதி யூன் சுக் யெப்பின் இராணுவச் சட்டத்தின் பிரகடனம் கொரிய ஜனநாயக அமைப்பை அச்சுறுத்தியது.

எதிர்க்கட்சிகள் மற்றும் நிர்வாகத்தை ஆதரிப்பவர்கள் ஆகிய இரு தரப்பிலிருந்தும் பாராளுமன்றம் காட்டும் ஒற்றுமை நிச்சயமாக சர்வதேச அங்கீகாரத்திற்கு தகுதியானது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையின் கீழ் பாராளுமன்றத்தின் பலத்தை இது காட்டுகிறது.

இந்த அரசியலமைப்பு நெருக்கடியை அமைதியான முறையில் தீர்ப்பது கொரிய குடியரசின் நலனுக்குரியது.

தென்கொரிய ஜனாதிபதியால் அங்கு அவசரகால இராணுவ சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில் அங்கு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. 

பின்னர் குறித்த சட்டத்தை தளர்த்துவதற்கான யோசனை தென்கொரி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

அதேவேளை அதனை தளர்த்துவதாக தென்கொரிய ஜனாதிபதியும் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தொம்பகஹவெல - பஹதராவ குளத்தில் நீராடச்...

2026-08-08 12:48:03
news-image

இலங்கை சிறைகளில் உள்ள இந்திய மீனவர்கள்...

2026-08-08 11:54:45
news-image

பல கடற்பகுதிகளுக்கு 'சிவப்பு' மட்ட எச்சரிக்கை!

2026-08-08 11:22:51
news-image

மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்துவது...

2026-08-08 11:24:38
news-image

பிரகீத் எக்னெலிகொட வழக்கு: விசேட மூவர்...

2026-08-08 10:56:46
news-image

பரவிபாஞ்சான் பாலத்தை புனரமைக்குமாறு கோரி மக்கள்...

2026-08-08 10:53:50
news-image

யாழில் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாவிகளை இலக்காக...

2026-08-08 10:39:40
news-image

சிறைச்சாலைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒருங்கிணைந்த...

2026-08-08 10:34:00
news-image

புளியங்குளம் பகுதியில் வாகன விபத்து: இளைஞர்...

2026-08-08 09:57:10
news-image

நாளை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை:...

2026-08-08 09:54:46
news-image

இந்தியா–இலங்கை ஆடை வர்த்தக மாநாடு!

2026-08-08 09:47:56
news-image

மெகசின் சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதி...

2026-08-08 09:19:59