மன்னார் மாவட்ட நீதிவான் நீதி­மன்ற முன்னாள் நீதி­ப­தியை தொலை­பேசி மூலம் மிரட்­டி­ய­தாகக் கூறப்­படும் சம்­பவம் தொடர்­பாக அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதி­ராக மன்னார் மாவட்ட நீதிவான் நீதி­மன்றில் நடை­பெற்­று­வரும் வழக்கு எதிர்­வரும் நவம்பர் மாதம் 12 ஆம் திக­தி­வரை ஒத்­தி­வைக்­கப்­பட்­டது,

கடந்த ஐந்து வரு­டங்­க­ளுக்கு முன்பு மன்னார் நகர் கோந்­தப்­பிட்டி கடற்­கரை சம்­பந்­த­மாக இரு சாரா­ருக்­கி­டையே நில­விய வழக்கு சம்­பந்­த­மாக வன்னித் தொகுதி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் வர்த்­தக மற்றும் வாணி­பத்­துறை அமைச்­ச­ரு­மான ரிஷாட் பதி­யுதீன் அன்­றைய அவ் வழக்கின் விசா­ர­ணையை மேற்­கொண்ட மன்னார் மாவட்ட நீதிவான் ஜூட்­சனை தொலை­பே­சி­யி­னூ­டாக அச்­சு­றுத்­தி­ய­தாக தெரி­வித்து அமைச்­ச­ருக்கு எதி­ராக வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது.

இவ் வழக்கு நேற்று திங்கட்கிழமை மன்னார் மாவட்ட நீதிவான் நீதி­மன்றில் நீதி­பதி ஆசீர்­வாதம் கிறே­சியன் அலெக்ஸ்­ராஜா முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு எடுக்­கப்­பட்­ட­போது அமைச்சர் மன்றில் ஆஜரா­கி­யி­ருந்தார். இவ் வழக்கு சம்­பந்­த­மாக சட்­டமா அதி­ப­ரி­ட­மி­ருந்து இன்னும் அறிக்கை கிடைக்கப் பெற­வில்லை என தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இவ் வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 12 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது.