பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அநுராதபுரம், உடமலுவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவந்துள்ளதாவது,
பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் கடந்த ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி ஸ்ரீ மஹா போதி விகாரையில் கடமையில் ஈடுபட்டிருந்துள்ள நிலையில் அதன் மேற்பார்வையாளராக சந்தேக நபரான உப பொலிஸ் பரிசோதகர் செயற்பட்டுள்ளார்.
இதன்பாது, சந்தேக நபரான உப பொலிஸ் பரிசோதகர் இந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிளை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
துஷ்பிரயோகத்திற்குள்ளான பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் இது தொடர்பில் அநுராதபுரம் பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு அளித்துள்ளார்.
இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான உப பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM