மாவீரர் தின நினைவேந்தல்கள் தொடர்பான பழைய காணொளிகளை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட காரணத்தால் கைது செய்யப்பட்ட மூவரில், சமூக செயற்பாட்டாளரான கெலும் ஜெயசுமணவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் மற்றுமொருவரான பத்தேகம பகுதியைச் சேர்ந்த நபரை டிசம்பர் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பத்தேகம நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த வருடங்களில் மாவீரர் தின நினைவேந்தல்களின்போது எடுக்கப்பட்ட பழைய காணொளிகளை இவ்வருட நினைவேந்தல் நிகழ்வுகள் எனக் கூறி முகநூல் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மருதானை, சுன்னாகம் மற்றும் பத்தேகம பிரதேசங்களைச் சேர்ந்த 28, 35 மற்றும் 45 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களில் பத்தேகமவைச் சேர்ந்த நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு, சமூக செயற்பாட்டாளர் கெலும் ஜெயசுமண பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு புதன்கிழமை (04) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்தார்.
இதன்போது குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணை அதிகாரிகள் விடயங்களை முன்வைத்து, பிரான்ஸ் நாட்டில் உள்ள பெண்ணொருவரின் முகநூல் பக்கத்தில் இருந்து தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள்
அமைப்புடன் தொடர்புடைய புகைப்படங்களை பதிவிறக்கம் செய்து சந்தேக நபர் அதனை மீள்பதிவேற்றம் செய்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
இதனையடுத்து சந்தேக நபரை இரு சரீரப் பிணையில் விடுவிக்குமாறு உத்தரவு பிறப்பித்த நீதவான் இந்த வழக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM