(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)
சிங்கள மக்களும் தமிழ் பேசும் மக்களும் இலங்கைத் தீவின் இணை உரிமையாளர்களும் இணைப் பங்காளர்கள் என்ற மனப்பாங்குடன் ஒரு புதிய அரசியலை அணுக அரசு தயாராக வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் (12-03) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் , ஜனாதிபதி தனது கொள்கைப்பிரகடன உரையில் பலவிடயங்களை குறிப்பிட்டிருந்தாலும் 80 வருடங்களாக இந்த மண்ணில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் அவர் ஒரு வார்த்தை கூட பேசாது விட்டது துரதிஸ்டவசமானது என்றும் சுட்டிக்காட்டினார்.
இதே பாராளுமன்றத்தில் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட கோத்தபாய ராஜபக்ச தனது கொள்கைப்பிரகடன உரையிலும் அதற்கு பின்னர் அவர் இந்தியா சென்றபோது இந்து பத்திரிகைக்கு அளித்த பேட்டியிலும் இந்த நாட்டில் உள்ள பிரச்சினை தொடர்பில், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் எந்தவொரு வார்த்தைகளையும் பேசாது தவிர்த்து சென்றிருந்தார். அந்த தவிர்ப்பு என்பது இந்த நாட்டில் அவரை அடையாளம் தெரியாமல் ஆக்கிவைத்துள்ளது என்ற வரலாற்றை நீங்கள் ஒரு முறை திரும்பிப்பார்க்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சிங்கள மக்களின் தேசிய அடையாளங்கள், உங்களின் இன, மத கலாசார அடையாளங்களை, நில. மொழி அடையாளங்களை நாம் மதிக்கின்றோம். இது ஒரு இனத்துக்குரியது. அதேபோல் இந்த மண்ணில் 21 ஆம் நூற்றாண்டின் காலத்துக்கு நீங்கள் வருவதெனில் இப்போதுள்ள காலச்சூழலில் எவ்வாறான விடயங்களை கையாள வேண்டும்.எவ்வாறு அரசியல் மாற்றங்களை நோக்கி நகர வேண்டும் எனப்தில் உங்களின் கரிசனையை, எண்ணங்களை நாம் எதிர்பார்க்கின்றோம்.
அதற்காக உங்களுடன் பேசுவதற்கும் சிங்கள மக்களின் எண்ணங்களோடு சேர்ந்து செல்வதற்கும் இந்த நாட்டில் நாங்களும் எங்களுக்குரிய மொழி, பண்பாடு, எங்களுக்குரிய நில அடையாளம், பூர்வீக குடிகளான நாம் இந்த தேசத்தில் உங்களின் இனக்குழுமமாக சேர்ந்து வாழ நாங்களும் நீங்களும் தேசத்தில் ஒன்றாக இருந்தாலும் இரண்டுபட்ட தேசங்களுக்குறிய இரண்டுபட்ட இனக்குழுமங்கள் என்ற அடையாளத்தோடு வாழ்வதற்கு நாங்கள் விரும்புகின்றோம் என்றும் அவர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM