(நெவில் அன்தனி)
கிறைஸ்ட்சேர்ச் ஹெக்லி ஓவல் விளையாட்டரங்கில் கடந்த வாரம் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஓவர் வீதத்தை மந்தகதியில்பேணியதற்காக இங்கிலாந்து, நியூஸிலாந்து ஆகிய இரண்டு அணிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இரண்டு அணிகளுக்கும் போட்டிக் கட்டணத்தில் 15 சதவீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி புள்ளிகளில் தண்டனையாக 3 புள்ளிகள் குறைக்கப்பட்டும் உள்ளது.
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிகள் குறைக்கபட்டதால் அணிகள் நிலையில் 4ஆம் இடத்திலிருந்த நியூஸிலாந்து இப்போது 5ஆம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.
பென் ஸ்டோக்ஸ் மற்றும் டொம் லெதம் ஆகிய இருவரினது அணிகளும் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு மேலதிகமாக வழங்கப்பட்ட சலுகை நேர முடிவில் 3 ஓவர்கள் குறைவாக வீசியிருந்ததாக எமிரேட்ஸ் ஐசிசி உயரடுக்கு போட்டி தீர்ப்பாளர் டேவிட் பூன் தீர்ப்பளித்து அபராதங்களை விதித்தார்.
வீரர்கள் மற்றும் வீரர்களின் உதவியாளர்களுக்கான ஐசிசி ஒழுக்கக் கோவை 2.22ஆம் இலக்க பரிந்துரையானது மந்தகதி ஓவர் வீதத்துடனும் தொடர்புபட்டுள்ளதால் குறிப்பிட்ட நேரத்திற்குள் வீசத் தவறும் ஒவ்வொரு ஓவருக்கும் வீரர்களின் போட்டி கட்டணத்தில் ஐந்து சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.
அதனைவிட, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் விளையாடும் நிபந்தனைகளில் 16.11.2ஆம் இலக்க பரிந்துரைக்கமைய ஒவ்வொரு அணிக்கும் ஓவருக்கு தலா ஒரு புள்ளி அபாரதம் விதிக்கப்படுகிறது.
இரண்டு அணிகளினதும் தலைவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதாலும் முன்மொழியப்பட்ட தண்டனைகளை ஏற்றுக்கொண்டதாலும் சம்பிரதாயபூர்வ விசாரணைக்கு அவசியம் ஏற்படவில்லை.
ஓவர்கள் மந்த கதியில் வீசப்பட்டதாக கள மத்தியஸ்தர்கள் அஹ்சன் ராஸா, ரொட் டக்கர், மூன்றாவது மத்திஸ்தர் ஏட்றியன் ஹோல்ட்ஸ்டொக் மற்றும் நான்காவது மத்தியஸ்தர் கிம் கொட்டன் ஆகியோர் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
ஐசிசியினால் விதிக்கப்பட்ட அபராதங்களுக்கு அமைய இரண்டு அணிகளும் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் பெற்ற மொத்த புள்ளிகளில் அபராதமாக தலா 3 புள்ளிகள் கழிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவற்றின் விகிதாசார புள்ளிகளும் இயல்பாகவே குறைந்துள்ளது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM