19இன் கீழ் ஆசிய கிண்ணம்:   தின்சார அபார சதம்;  பங்களாதேஷை வீழ்த்தி பி குழுவில் முதலிடம் பிடித்தது இலங்கை

Published By: Vishnu

03 Dec, 2024 | 09:48 PM
image

(நெவில் அன்தனி)

ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்ற பங்களாதேஷுக்கு எதிரான 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் பி குழு போட்டியில் 7 ஓட்டங்களால் இலங்கை பரபரப்பான வெற்றியை ஈட்டியது.

விமத் தின்சார குவித்த சதம், விஹாஸ் தெவ்மிக்கவின் துல்லியமான பந்துவீச்சு, குகதாஸ் மாதுளனின் சாதுரியமான கடைசி ஓவர், சண்முகநாதன் ஷாருஜனின் புத்திகூர்மையான களத்தடுப்பு என்பன இலங்கை இளையோர் அணியை வெற்றிபெறச் செய்தன.

இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 229 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 10 ஓட்டங்களும் இலங்கையின் வெற்றிக்கு ஒரு விக்கெட்டும் தேவைப்பட்டது.

கடைசி ஓவரை மிகவும் சாதுரியமாக வீசிய மாதுளன் முதல் இரண்டு பந்துகளில் ஒரு வைட் உட்பட 2 ஒட்டங்களைக் கொடுத்தார்.

அவரது 3ஆவது பந்தில் மொஹமத் பாரித் ஹசன் பைசால் அவசரமான ஓட்டம் ஒன்றை எடுக்க முயற்சித்தபோது அவரை ரன் அவுட் ஆக்கிய ஷாருஜன் தனது அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.

இந்தப் போட்டியில் வெற்றியீட்டிய இலங்கை பி குழுவில் தோல்வி அடையாத அணியாக அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.

பங்களாதேஷுடனான இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 49.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 228 ஓட்டங்களைப் பெற்றது.

முதலிரண்டு போட்டிகளில் அபார ஆற்றல்களை வெளிப்படுத்திய சண்முகநாதன் ஷாருஜன் இன்றைய போட்டியில் வெறும் 4 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

எனினும் 5ஆவது ஓவரில் 4ஆம் இலக்கத்தில் துடுப்பாட்ட வீரராக களம் நுழைந்த றோயல் கல்லூரி வீரர் விமத் தின்சார 132 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டறிகளுடன் 106 ஓட்டங்களைப் பெற்று கடைசி ஓவரில் ஆட்டம் இழந்தார்.

மத்திய வரிசை  துடுப்பாட்டத்தில்  அணித் தலைவர் விஹாஸ் தெவ்மிக்க (22), லக்வின் அபேசிங்க (21), விரான் சமுதித்த (20) ஆகியோர்  தங்களாலான அதிகப்பட்ச பங்களிப்பை வழங்கினர்.

பந்துவீச்சில் மொஹமத் அல் பஹாத் 50 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மொஹமத் ரிஸான் ஹொசன் 40 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 49.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 221 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவியது.

ஸவாத் அப்ரார், கலாம் சித்திக்கி அலீன் ஆகிய இருவரும் 57 பந்துகளில் 53 ஓட்டங்களைப் பகிர்ந்த சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

அப்ரார் 24 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்ததைத் தொடர்ந்து மேலும் 2 விக்கெட்கள் சீரான இடைவெளியில் சரிந்தன. (98 - 3 விக்.)

ஆனால், அலீன், தெபாசிஷ் சர்க்கார் தெபா ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 74 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 172 ஓட்டங்களாக உயர்த்தினர்.

இதன் காரணமாக பங்களாதேஷ் இலகுவாக வெற்றிபெற்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், 49 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷின் கடைசி 7 விக்கெட்கள் வீழ்த்தப்பட இலங்கை பரபரப்பான வெற்றியை ஈட்டியது.

கலாம் சித்திக்கி அலீன் 95 ஓட்டங்களையும் தெபாசிஷ் சர்க்கார் தெபா 31 ஓட்டங்களையும் மொஹமத் பரித் ஹசன் பைசால் 24 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் விஹாஸ் தெவ்மிக்க 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் குகதாஸ் மாதுளன் 29 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் ப்ரவீன் மனீஷ 40 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் விரான் சமுதித்த 48 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

ரஞ்சித்குமார் நியூட்டன் திறமையாக பந்துவீசியபோதிலும் அவரை 5 ஓவர்களுக்கு அப்பால் அணித் தலைவர் விஹாஸ் தெவ்மிக்க பயன்படுத்தவில்லை.

ஆட்டநாயகன்: விமத் தின்சார19இன் கீழ் ஆசிய கிண்ணம்:   தின்சார அபார சதம்;  பங்களாதேஷை வீழ்த்தி பி குழுவில் முதலிடம் பிடித்தது இலங்கை

(நெவில் அன்தனி)

ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்ற பங்களாதேஷுக்கு எதிரான 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் பி குழு போட்டியில் 7 ஓட்டங்களால் இலங்கை பரபரப்பான வெற்றியை ஈட்டியது.

விமத் தின்சார குவித்த சதம், விஹாஸ் தெவ்மிக்கவின் துல்லியமான பந்துவீச்சு, குகதாஸ் மாதுளனின் சாதுரியமான கடைசி ஓவர், சண்முகநாதன் ஷாருஜனின் புத்திகூர்மையான களத்தடுப்பு என்பன இலங்கை இளையோர் அணியை வெற்றிபெறச் செய்தன.

இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 229 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 10 ஓட்டங்களும் இலங்கையின் வெற்றிக்கு ஒரு விக்கெட்டும் தேவைப்பட்டது.

கடைசி ஓவரை மிகவும் சாதுரியமாக வீசிய மாதுளன் முதல் இரண்டு பந்துகளில் ஒரு வைட் உட்பட 2 ஒட்டங்களைக் கொடுத்தார்.

அவரது 3ஆவது பந்தில் மொஹமத் பாரித் ஹசன் பைசால் அவசரமான ஓட்டம் ஒன்றை எடுக்க முயற்சித்தபோது அவரை ரன் அவுட் ஆக்கிய ஷாருஜன் தனது அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.

இந்தப் போட்டியில் வெற்றியீட்டிய இலங்கை பி குழுவில் தோல்வி அடையாத அணியாக அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.

பங்களாதேஷுடனான இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 49.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 228 ஓட்டங்களைப் பெற்றது.

முதலிரண்டு போட்டிகளில் அபார ஆற்றல்களை வெளிப்படுத்திய சண்முகநாதன் ஷாருஜன் இன்றைய போட்டியில் வெறும் 4 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

எனினும் 5ஆவது ஓவரில் 4ஆம் இலக்கத்தில் துடுப்பாட்ட வீரராக களம் நுழைந்த றோயல் கல்லூரி வீரர் விமத் தின்சார 132 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டறிகளுடன் 106 ஓட்டங்களைப் பெற்று கடைசி ஓவரில் ஆட்டம் இழந்தார்.

மத்திய வரிசை  துடுப்பாட்டத்தில்  அணித் தலைவர் விஹாஸ் தெவ்மிக்க (22), லக்வின் அபேசிங்க (21), விரான் சமுதித்த (20) ஆகியோர்  தங்களாலான அதிகப்பட்ச பங்களிப்பை வழங்கினர்.

பந்துவீச்சில் மொஹமத் அல் பஹாத் 50 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மொஹமத் ரிஸான் ஹொசன் 40 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 49.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 221 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவியது.

ஸவாத் அப்ரார், கலாம் சித்திக்கி அலீன் ஆகிய இருவரும் 57 பந்துகளில் 53 ஓட்டங்களைப் பகிர்ந்த சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

அப்ரார் 24 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்ததைத் தொடர்ந்து மேலும் 2 விக்கெட்கள் சீரான இடைவெளியில் சரிந்தன. (98 - 3 விக்.)

ஆனால், அலீன், தெபாசிஷ் சர்க்கார் தெபா ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 74 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 172 ஓட்டங்களாக உயர்த்தினர்.

இதன் காரணமாக பங்களாதேஷ் இலகுவாக வெற்றிபெற்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், 49 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷின் கடைசி 7 விக்கெட்கள் வீழ்த்தப்பட இலங்கை பரபரப்பான வெற்றியை ஈட்டியது.

கலாம் சித்திக்கி அலீன் 95 ஓட்டங்களையும் தெபாசிஷ் சர்க்கார் தெபா 31 ஓட்டங்களையும் மொஹமத் பரித் ஹசன் பைசால் 24 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் விஹாஸ் தெவ்மிக்க 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் குகதாஸ் மாதுளன் 29 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் ப்ரவீன் மனீஷ 40 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் விரான் சமுதித்த 48 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

ரஞ்சித்குமார் நியூட்டன் திறமையாக பந்துவீசியபோதிலும் அவரை 5 ஓவர்களுக்கு அப்பால் அணித் தலைவர் விஹாஸ் தெவ்மிக்க பயன்படுத்தவில்லை.

ஆட்டநாயகன்: விமத் தின்சார

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐசிசி அங்குரார்ப்பண மகளிர் சவால் கிண்ண...

2026-04-17 18:02:57
news-image

19 வயதுக்குட்பட்ட பெண்கள் மும்முனை ரி20...

2026-04-17 16:33:18
news-image

குவின்டன்  டி கொக் குவித்த அபார...

2026-04-17 05:47:10
news-image

பங்களாதேஷ் செல்லவுள்ள இலங்கை மகளிர் குழாம்...

2026-04-16 19:06:39
news-image

நியூஸிலாந்து ஏ அணியுடனான உத்தியோகப்பற்றற்ற டெஸ்டில்...

2026-04-16 18:55:58
news-image

இலங்கை விளையாட்டுத்துறையில் பெண்களுக்கு தேசிய ஒலிம்பிக்...

2026-04-16 16:27:53
news-image

பெங்களூருவின் பந்துவீச்சில் சரிந்தது லக்னோவ்; அணிகள்...

2026-04-15 23:47:23
news-image

108ஆவது அகில இங்கிலாந்து சிரேஷ்ட (மாஸ்டர்ஸ்)...

2026-04-15 17:22:54
news-image

ஒன்பது விஸ்டன் விருதுகளில் ஏழு விருதுகளை...

2026-04-15 16:39:56
news-image

உலக கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் வீரர்கள்...

2026-04-15 14:40:20
news-image

நூர் அஹ்மதின் துல்லிய பந்துவீச்சின் உதவியுடன்...

2026-04-15 00:09:03
news-image

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் தடுமாறிய ராஜஸ்தான் றோயல்ஸ்...

2026-04-14 03:51:27