நவக்கிரகங்கள் நீசமடைதலும் பரிகாரங்களும்

03 Dec, 2024 | 06:40 PM
image

எம்முடைய ஜாதகத்தில் சிலருக்கு நவகிரகங்கள் நீசமடைந்திருக்கும். இதனால் அந்த கிரகம் வழங்கக்கூடிய பலன்களில் தடை, தாமதம் ஆகியவை ஏற்படக்கூடும். 

உங்களுடைய ஜாதகத்தில் குறிப்பிட்ட கிரகங்கள் நன்மையை வழங்க கடமைப்பட்டிருந்தாலும்.. அவை நீசம் அடைந்திருந்தால் மிக குறைவான பலன்களையே தரும். 

மேலும் அந்த கிரகம் பகை வீட்டில் அதாவது கிரகத்திற்கு ஆகாத வீட்டிலோ அல்லது ஆகாத நட்சத்திரத்தின் சாரத்திலோ இடம் பிடித்திருந்தால் கிடைக்கும் மிகக் குறைவான பலன்களும் கிடைக்காது. 

அது மட்டுமல்ல கெடுப்பலன்களும்  ஏற்படக்கூடும். இதனால் உங்களது ஜாதகத்தில் சூரியன் முதல் கேது வரையிலான நவக்கிரகங்கள் நீச்சமடைந்திருந்தால் பின்வரும் பரிகாரத்தை முறையாக மேற்கொண்டால் பாதிப்பிலிருந்து நிவாரணம் பெறுவதுடன், பலன்களையும் முழுமையாக பெறலாம்.

பரிகாரங்களில் பலவகை உண்டு. அதில் வலிமையான பரிகாரம் என்பது விருட்ச பரிகாரம். அதாவது மரங்களை குறிப்பிட்ட மரங்களை வளர்ப்பது.. மரங்களை பதியமிடுவது... மரங்களை தண்ணீர் ஊற்றி, உரமிட்டு பராமரிப்பது.. மரங்களை வணங்குவது.. மரங்களை குறிப்பிட்ட தினத்தில் வலம் வருவது.. என ஏராளமான விடயங்கள் சூட்சமமாக இருக்கிறது.

இதில் நவகிரகங்கள் நீசமடைந்திருந்தால் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிட்டிருக்கும் மரங்களின் வேர்களை அதற்குரிய முறைப்படி எடுத்து வந்து, அதனை வெள்ளி அல்லது தங்கத்தினாலான தாயத்தில் வைத்து எம்முடன் வைத்துக் கொண்டால்... குறிப்பிட்ட கிரகம் நீச்சமடைந்ததனால்  உண்டாகும் தடை, தாமதத்தை அகற்றி முழுமையான பலன்களைப் பெறலாம்.

தற்போது நவக்கிரகங்களுக்கான பரிகார வேர் எது? என்பதை காண்போம்.

சூரியன் - வில்வ மரத்தின் வேர்

சந்திரன் - பாலை மரத்தின் வேர்

செவ்வாய் - நாயுருவி மர வேர்

புதன் - புங்கை மரத்தின் வேர்

சுக்கிரன் - அத்தி மர வேர்

குரு -  பரங்கி மரத்தின் வேர்

சனி - வன்னி மர வேர்

ராகு - சந்தன மர வேர்

கேது - அஸ்வகந்தி செடியின் வேர்

மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் மரத்தினை துல்லியமாக அவதானித்து காலை 6 மணிக்கு மேல் மாலை 6:00 மணிக்குள் முறையாக மரத்திற்கு அருகே சென்று ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிட்டபடி மந்திரத்தை உச்சரித்து, அதனுடைய வேரை சிறிதளவு எடுக்க வேண்டும்.

பின்னர் அதனை சுத்தப்படுத்தி உங்களுடைய தாயத்தில் அல்லது மோதிரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இப்படி செய்யும் போது எந்த கிரகம் உங்களுக்கு நீசம் அடைந்திருக்கிறதோ.. அந்த கிரகத்தால் முழுமையான பலன் கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாகும். 

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாவங்கள் நீக்குவதற்கான எளிய வழிமுறை..!?

2025-01-22 17:24:15
news-image

உங்களுக்கு கூர்ம யோகம் இருக்கிறதா..!?

2025-01-21 15:49:42
news-image

அபிஷேகம் செய்வதன் மூலம் பலன் பெறுவது...

2025-01-20 17:52:05
news-image

கடன் சுமை குறைவதற்கான எளிய பரிகாரம்...!?

2025-01-18 22:11:20
news-image

வருவாயை அதிகரித்துக் கொள்வதற்கான சூட்சுமமான வழிமுறை..!?

2025-01-17 17:01:03
news-image

தொழிலில் ஏற்படும் தடையை நீக்குவதற்கான எளிய...

2025-01-16 20:12:57
news-image

செல்லப் பிராணியை எப்போது வாங்கலாம்?

2025-01-15 17:39:12
news-image

ஒவ்வொருவரும் நாளாந்தம் பின்பற்ற வேண்டிய ஆன்மீக...

2025-01-13 15:56:39
news-image

குலதெய்வத்தின் அருளை பெறுவதற்கு எளிமையான வழிமுறை..!?

2025-01-09 15:26:03
news-image

எதிர்மறை ஆற்றலை அழித்து செல்வத்தை குவிக்கும்...

2025-01-08 19:26:11
news-image

கல்வியில் தேர்ச்சி பெறுவதற்கான எளிய குறிப்புகள்..!?

2025-01-07 16:03:17
news-image

ஆகமி கிரகத்தின் அருளை பெறுவதற்கான சூட்சம...

2025-01-06 16:36:08