சினைப்பை நீர்க்கட்டி பாதிப்பை சீரமைக்கும் நவீன நுண் துளை சத்திர சிகிச்சை

Published By: Digital Desk 7

03 Dec, 2024 | 04:32 PM
image

இன்றைய திகதியில் எம்முடைய பெண்களும், பெண்மணிகளும் தங்களுடைய வாழ்க்கை நடைமுறையை மாற்றி அமைத்துக் கொண்டதாலும், உணவு முறையை மாற்றி அமைத்துக் கொண்டதாலும்,, அவர்களுடைய மாதவிடாய் சமச்சீரற்றதாக மாற்றம் பெறுகிறது.

இதன் காரணமாகவோ அல்லது வேறு விவரிக்க இயலாத காரணங்களாலோ சினைப்பையில் நீர்க்கட்டி பாதிப்பு ஏற்படுகிறது. இத்தகைய பாதிப்பிற்கு தற்போது கருப்பை தமனி எம்போலைசேசன் ( Uterine Artery Embolization) எனும் நவீன நுண் துளை சத்திர சிகிச்சை அறிமுகமாகி இருப்பதாக வைத்திய நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

எம்முடைய பெண்களுக்கு மாதவிடாய் என்பது சீரானதாக இருக்க வேண்டும்.‌ஆனால் ஐந்து பெண்களின் மூன்று பெண்களுக்கு மாதவிடாய் என்பது சமச்சீரற்றதாகவும்,  மாதவிடாய் காலங்களில் கூடுதல் ரத்தப்போக்கும் , தாங்க இயலாத வலியும் ஏற்படுகிறது.

இந்நிலையில் இவர்கள் இதற்காக வைத்தியர்களை சந்தித்து முறையான சிகிச்சையும், ஆலோசனையும் பெறுவதில்லை. தோழிகள் மற்றும் மூத்த பெண் குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனைப்படி சுய மருத்துவம் செய்து கொள்கிறார்கள். இதனால் அவர்களுக்கு சினைப்பையில் நீர்க்கட்டி உண்டாகிறது.

சிலருக்கு இத்தகைய கட்டி 10 சென்டி மீற்றருக்கு மேல் வளர்ந்து விவரிக்க இயலாத சௌகரியங்களை ஏற்படுத்துகிறது.  இவர்களுக்கு நிவாரணம் தருவதற்காக தற்போது கருப்பை தமனி எம்போலைசேசன் எனும் நவீன நுண் துளை சத்திர சிகிச்சை அறிமுகமாகியிருக்கிறது.

இத்தகைய சத்திர சிகிச்சையின் போது தொடை பகுதியில் இருந்து சிறிய அளவிலான குழாயை பொருத்தி அதனை சினைப்பை நீர்க்கட்டி இருக்கும் இடத்திற்கு அருகே சென்று, அதற்கு கிடைக்கும் ரத்த ஓட்டத்தை தடை செய்வார்கள். இதன் பிறகு நீர்க்கட்டி அளவு குறைந்து வெளியேறிவிடும்.

இத்தகைய நுண் துளை சத்திர சிகிச்சை மூலம் பக்க விளைவுகள் குறைவாக இருப்பதாலும், பாதிப்பிலிருந்து விரைவாகவும், நிறைவாகவும், கருப்பையை அகற்றாமலும் நிவாரணம் கிடைப்பதாலும் பெண்கள் இத்தகைய  சிகிச்சைக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்.

இத்தகைய நுண் துளை சத்திர சிகிச்சைக்கு பிறகு வைத்தியர்கள் பரிந்துரைக்கும் வாழ்க்கை நடைமுறை மற்றும் உணவு முறையை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்தால் இத்தகைய பாதிப்பு மீண்டும் ஏற்படாமல் தற்காத்துக் கொள்ள இயலும் என வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

வைத்தியர் ஸ்ரீதேவி

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போஸ்ட் வைரல் ஓர்தரைடீஸ் எனும் காய்ச்சலுக்கு...

2025-01-22 17:01:32
news-image

வாய் வறட்சி எனும் உலர் வாய்...

2025-01-21 15:19:43
news-image

செபோர்ஹெக் டெர்மடிடிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2025-01-20 17:51:49
news-image

பிரஸ்பியோபியா எனும் பார்வை திறன் குறைபாட்டை...

2025-01-18 18:06:52
news-image

அதிகரித்து வரும் சிட்டிங் டிஸீஸ் பாதிப்பிலிருந்து...

2025-01-17 15:06:44
news-image

புல்லஸ் பெம்பிகொய்ட் - கொப்புளங்களில் திரவம்! 

2025-01-16 16:54:51
news-image

அறிகுறியற்ற மாரடைப்பும் சிகிச்சையும்

2025-01-15 17:42:27
news-image

நரம்பு வலிக்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-01-13 15:56:02
news-image

பியோஜெனிக் ஸ்போண்டிலோடிசிடிஸ் எனும் முதுகெலும்பு தொற்று...

2025-01-09 16:19:03
news-image

புல்லஸ் எம்பஸிமா எனும் நுரையீரல் நோய்...

2025-01-08 19:25:03
news-image

இன்சுலினோமா எனும் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2025-01-07 17:23:56
news-image

கார்டியோபல்மனரி உடற்பயிற்சி சோதனை - CPET...

2025-01-06 16:52:15