களுத்துறை - பண்டாரகமையில் கையடக்கத் தொலைபேசி தொடர்பில் ஏற்பட்ட தகராறில், 17 வயதுடைய சிறுவனால் கத்திக்குத்துக்கு இலக்காகி இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரகம பேமதுவ, 13ஆம் தூண் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளான்.
இது தொடர்பில் மேலும் தெரிவயவருவது ,
கடந்த முதலாம் திகதி சந்தேக நபரும் உயிரிழந்த நபரும் வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்தபோது கைத்தொலைபேசி தொடர்பில் ஏற்பட்ட தகராறில், சிறுவன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குறித்த நபரை தாக்கியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இருவரும் சண்டையிட்டுக்கொண்டிருந்த போது ஸ்தலத்துக்கு விரைந்த நெல் உரிமையாளர் சந்தேக நபரை பிளாஸ்டிக் குழாயினால் தாக்கி அவரது கையிலிருந்த கத்தியை பறித்து உயிரிழந்தவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM