நேரக்கணிப்பாளர் மீது தாக்குதல்; வவுனியா பேருந்து நிலையத்தில் அமைதியின்மை

03 Dec, 2024 | 06:25 PM
image

அரச, தனியார் பேருந்து தரப்பினருக்கு இடையில் முரன்பாடு ஏற்பட்டமையால் வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவந்துள்ளதாவது,  

இன்று செவ்வாய்க்கிழமை (03) காலை வவுனியாவில் இருந்து கல்முனை நோக்கி புறப்படத் தயாராக இருந்த அரச பேருந்து தரப்பினருக்கும் தனியார் பேருந்து தரப்பினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்ப்பட்டது.

அரச பேருந்து புறப்படுகின்ற நேரம் தொடர்பிலேயே குறித்த வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.  இதனால் பேருந்து நிலையப் பகுதியில் இரு தரப்புக்கும் இடையில் குழப்பநிலை ஏற்பட்டது. 

சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிஸார் நிலைமையை கட்டுப்படுத்தியிருந்தனர். 

இதேவேளை,  பேருந்து நிலையத்தில் கடமையாற்றும் போக்குவரத்துச்சபையின் நேரக்கணிப்பாளர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்து அவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன், அரச பேருந்து ஒன்றும் தனியார் பேருந்தும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகளை கதைப்பதற்கு ஜீவன்...

2025-02-06 18:54:04
news-image

தேசியக் கொடியை இறக்கிவிட்டு கறுப்புக் கொடியை...

2025-02-06 19:11:23
news-image

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையில் மாற்றமில்லை தற்போதைய...

2025-02-06 16:24:53
news-image

சர்ச்சைக்குரிய கிரிஷ் கட்டிடத்தில் தீ

2025-02-06 21:41:18
news-image

பரிசோதனை செய்யப்படவேண்டிய கொள்கலன்களை பரிசோதனையின்றி விடுவித்தமைக்கு...

2025-02-06 19:10:02
news-image

சேறு பூசலை பிரத்தியேக நாமமாக பயன்படுத்த...

2025-02-06 17:18:25
news-image

பதவி விலகவுள்ள ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள்...

2025-02-06 16:48:03
news-image

டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாட்டை கொண்டுச்...

2025-02-06 20:52:31
news-image

ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுக்கும்...

2025-02-06 20:42:13
news-image

''நடுவே பாய வேண்டாம்'' பிரதி சபாநாயகரை...

2025-02-06 19:11:52
news-image

கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில்...

2025-02-06 14:33:26
news-image

புதிய முப்படைத் தளபதிகள் ஜனாதிபதியை சந்தித்தனர் 

2025-02-06 19:24:44