புத்தளம், மதுரங்குளி பிரதேசத்தில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறை கட்டுப்படுத்த பொலிஸார் தரையில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவந்துள்ளது,
அண்மைக்காலமாக நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மதுரங்குளி பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இதனால் தனியார் காணி ஒன்றின் குறுக்கே வடிகான் அமைப்பதற்கு பிரதேசவாசிகள் சிலர் இணைந்து மதுரங்குளி பிரதேசத்திற்கு சென்றுள்ளனர்.
இதன்போது காணியின் உரிமையாளர் வடிகான் அமைப்பதற்கு அனுமதி வழங்க மறுத்துள்ளார். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
தகராறை கட்டுப்படுத்த மதுரங்குளி பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
அதன் பின்னர் தகராறை கட்டுப்படுத்த முந்தல் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்றும் ஸ்தலத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
பின்னர் பொலிஸ் அதிகாரிகள் தகராறு காரணமாக ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை கட்டுப்படுத்த தரையில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
சந்தேக நபர்கள் கொண்டுவந்த மூன்று உழவு இயந்திரங்கள், இரும்பு கம்பிகள், மற்றும் மரக்கட்டைகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM