(நெவில் அன்தனி)
சம்பியன்கள் கிண்ணம் (Champions Trophy), எதிர்கால ஐசிசி சுற்றுப் போட்டிகளை ஈரிடங்களில் நடத்தும் முறைமையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையும் பாகிஸ்தான் கிரிக்கெட சபையும் ஒப்புக்கொண்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இதுகாலவரை ஏட்டிக்கு போட்டி மனப்பான்மையுடன் செயல்பட்டு வந்த இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையும் பாகிஸ்தான் கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையும் அதிலிருந்து பின்வாங்கி, தங்களுக்கு இடையிலான ஐசிசி போட்டிகளை ஈரிடங்களில் விளையாட ஒப்புக்கொண்டுள்ளன.
இதன் காரணமாக அடுத்த வருடம் நடைபெறவுள்ள சம்பியன்கள் கிண்ண பொட்டியை நடத்துவதற்கான வழிமுறையை, போட்டி அட்டவணையை தயாரிக்கும் ஐசிசியின் பணி எளிதாக்கப்பட்டுள்ளது.
2025 பெப்ரவரி 19ஆம் திகதியிலிருந்து மார்ச் 9ஆம் திகதிவரை நடைபெறவுள்ள சம்பியன்கள் கிண்ண கிரிக்கெட் போட்டி தொடர்பாக ஆராய்வதற்கான இணையவழி கூட்டம் ஒன்றை சர்வதேச கிரிக்கட் பேரவை கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்திருந்தது.
இந்தக் கூட்டத்தின்போது ஈரிடங்கள் முறைமை குறித்த ஒருமித்த முடிவுக்கு வந்து பின்னர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையினதும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினதும் பிரதிநிதிகள் சனிக்கிழமையன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந் நிலையில், இந்திய அரசாங்கம் அதன் அணியை பாகிஸ்தானுக்குச் செல்ல அனுமதிக்க மறுத்ததால் அடுத்துவரும் மூன்று வருடங்களில் இந்தியாவில் போட்டிகள் நடத்தப்படும்போது, அதே மாதிரியை தனது அணிக்கும் பயன்படுத்த விரும்புவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வலியுறுத்தியுள்ளது.
இந்தத் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்வதற்கான இறுதி அனுமதியை சர்வதேச கிரிக்கட் பேரவையின் பணிப்பாளர்கள் சபை வழங்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வலியுறுத்தியுள்ளது.
கடந்த வருடம் நடைபெற்ற ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றுவதற்காக இந்தியாவுக்கு பாகிஸ்தான் அணி சென்னிறிருந்தது. அதன் பின்னர் ஈரிடங்கள் என்ற திட்டத்தை ஏற்கமுடியாது என்ற நிலைப்பாட்டில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உறுதியாக இருந்துவருகிறது.
தமது அணி எவ்வாறு உலகக் கிண்ணத்தில் பங்குபற்ற இந்தியாவுக்கு பயணித்ததோ அதேபோன்று சம்பியன்கள் கிண்ண போட்டியில் பங்குபற்ற தமது நாட்டிற்கு இந்தியா வரும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை எதிர்பார்த்தது.
1996 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை இலங்கை, இந்தியாவுடன் இணைந்து கூட்டாக நட்த்திய பின்னர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள முதலாவது ஐசிசி கிரிக்கெட் போட்டி சம்பியன்கள் கிண்ண கிரிக்கெட் போட்டியாகும். இந் நிலையில் எதிர்காலத்தில் தயவுதாட்சண்யங்களை எதிர்பார்க்கவேண்டாம் என்ற சமிக்ஞையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கு பாகிஸ்தான் கொடுத்துள்ளது.
'ஆமாம், கடந்த கால அனுபவம் பாகிஸ்தானுக்கு கசப்பானது, எதிர்காலத்தில் ஈரிடங்கள் என்ற முறைமை நடைமுறைப்படுத்தப்படும் என்பதற்கு ஐசிசி உறுதியான உத்தரவாதத்தை நல்லெண்ணத்துடன் எழுத்துமூலம் அளிக்க வேண்டும். மேலும் எந்தவொரு பாகிஸ்தான் அணியும் ஐசிசியின் எந்தப் போட்டிகளிலும் விளையாட இந்தியாவுக்குச் செல்லாது. அதே மாதிரி இந்திய அணி பாகிஸ்தானுக்கு வருகை தராது'' என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் வட்டாரம் ஒன்று அந் நாட்டு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளது.
இரண்டு கிரிக்கெட் சபைகளும் பரஸ்பர புரிந்துணர்வடன் ஒரு முடிவை எட்டுமாறு ஐசிசி கேட்டுக்கொண்டதாக அந்த வாட்டாரம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
துபாயில் இணையவழி கூட்டம் ஒன்றை வெள்ளிக்கிழமை நடத்துவதற்கான ஏற்பாட்டை ஐசிசி செய்திருந்தது. ஆனால் அந்தக் கூட்டம் சனிக்கிழமைக்கு பிற்போடப்பட்டிருந்தது.
அன்றைய தினம்தான் (டிசம்பர் 1) ஐசிசியின் தலைவர் பதவியை இந்தியாவின் ஜெய் ஷா பொறுப்பேற்றார். அத்துடன் இரண்டு கிரிக்கெட் சபைகளும் ஆலோசகைகளில் ஈடுபட்டிருந்ததால் அன்றைய தினமும் இணையவழி கூட்டம் நடைபெறவில்லை.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் தேசிய தினம் அனுஷ்டிக்கப்படுவதால் நாளை செவ்வாய்க்கிழமைவரை அந் நாட்டில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் எந்த நேரத்திலும் கூட்டம் நடத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்படலாம் என்று அந்த வட்டாரம் மேலும் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தானுக்கு விஜயம் செய்வதை இந்திய அரசு அனுமதிக்கவில்லை என்பதற்கான கடிதத்தை காட்டுமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கேட்டுக்கொண்டிருந்தது. ஆனால், அத்தகைய கடிதம் எதுவும் காட்டப்படவில்லை என்று அந்த வட்டாரம் மேலும் தெரிவித்துள்ளது.
'அரசாங்கத்திடம் இருந்து எந்தக் கடிதமும் இல்லை என்றும் அக்டோபர் 21ஆம் திகதி நடைபெற்ற ஐசிசி கூட்டத்தில் வழங்கப்பட்ட சம்பியன்கள் கிண்ணத்துக்கான முதன்மை பாதுகாப்பு திட்டத்தை ஒப்புக்கொண்டது என்றும் ஒருவேளை, விளையாட்டுத்துறை நியாயாதிக்க சபையிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையை அணுகி வழக்கு தொடுத்தால் அது இந்தியாவுக்கு பலவீனமதாகவே இருக்கும் என்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டச் சபையை மறைமுகமாக பின்வாசல் வட்டாரங்கள் எச்சரித்துள்ளன' என கூறப்படுகிறது.
ஐசிசியின் மிகவும் செல்வாக்கு மிக்க உறுப்பினராக இந்தியா உள்ளது. கிரிக்கெட்டின் நிர்வாகக் குழுவின் வருமானத்தில் பெரும்பங்கை இந்தியா பெறுகிறது எனவும் இரண்டு அணிகளும் மோதும் போட்டிகளின் மூலமே அதிக வருவாய் கிடைப்பதால் பாகிஸ்தான் அதிக பங்கைக் கேட்கலாம் எனவும் அந்த வட்டாரம் மேலும் தெரிவித்துள்ளது.
'சம்பியன்கள் கிண்ண சிக்கல் தீர்க்கப்பட்டவுடன் எதிர்கால வருமானத்திலிருந்து தனக்கு சேரவேண்டிய சரியான பங்கை பெறும் வகையில் சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் இந்த விடயங்களை பாகிஸ்தான் எடுத்துக்கூறும்' எனஅந்த வட்டாரம் கூறி முடித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM