எதிர்காலத்தில் அனர்த்தத்திற்கு முகம்கொடுக்க தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க அரசாங்கம் தயார் - அருண்  

02 Dec, 2024 | 07:42 PM
image

மட்டக்களப்பு மாவட்டத்தில் இயற்கை அனர்த்தங்களிலிருந்து முறையான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் அதற்கான நிதியுதவிகளை வழங்குவதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளதாகவும் பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார் .  

மட்டக்களப்பு மாவட்டத்தின் அனர்த்த நிலைமைகள் குறித்தும் அதன்போது முன்னெடுக்கப்படவேண்டிய  செயற்பாடுகள், எதிர்காலத்தில் அனத்தத்தினை முகம்கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆராயும் விசேட உயர்மட்ட கூட்டம் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரனின் ஒழுங்கமைப்பில் பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான அருண் ஹேமச்சந்திரா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன்,இ.சிறிநாத்,தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் பிரபு,எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா,நளீமி உட்பட திணைக்கள தலைவர்கள்,அனர்த்த முகாமைத்து நிலைய உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது கடந்த வெள்ள அனர்த்ததின்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்கொள்ளப்பட்ட பாதிப்புகள் அதன்போது முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் மற்றும் மாவட்டத்தில் ஏற்பட்ட நஸ்டங்கள், அதிகாரிகளின் செயற்பாடுகள் குறித்து ஆராயப்பட்டது. அத்துடன் அனர்த்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னெடுக்கப்படவேண்டிய செயற்பாடுகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

விசேடமாக செங்கலடி பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் அதிகமானோர் ஈடுபடுவதனால் வயல் நிலங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளது தொடர்பாக கலந்துரையாடப்பட்டு, தற்காலிகமாக குறித்த பகுதிக்கான மணல் அகழ்வு அனுமதிப்பத்திரங்களை இடைநிறுத்தி வைப்பதற்கான தீர்மானம் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரினால் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டதுடன், விவசாய பாதிப்பிற்கான நஸ்ட ஈடு வழங்குதல், போக்குவரத்து, கல்வி மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டெலுவதற்கு தேவையான ஏனைய விடையங்கள் தொடர்பாகவும் இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

எதிர்வரும் காலங்களில் ஏதேனும் அனர்த்தங்கள் ஏற்படின் அதற்கான முன்னாயத்த தயார்படுத்தல்களை எவ்வாறாக  மாவட்ட மட்டத்தில்  முன்னெடுக்க வேண்டும் என இதன் போது மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரினால் அதிகாரிகளுக்கு ஆலோசனை முன்வைக்கப்பட்டதுடன், மாவட்டத்தில்    அனர்த்தங்கள் ஏற்படக் காரணமாக திகழ்ந்து வரும் விடையங்கள் தொடர்பாக மக்கள் பிரதிநிதிகளினால் முன்வைக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-19 12:20:01
news-image

இலங்கை அரசியலுக்கு மகா சங்கத்தின் வழிகாட்டுதலும்...

2025-03-19 12:08:33
news-image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு வைபவம் ஆரம்பம்...

2025-03-19 12:10:26
news-image

6 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள்...

2025-03-19 11:55:55
news-image

பராமரிப்பற்ற நிலையில் வவுனியா புதிய பேருந்து...

2025-03-19 11:48:53
news-image

ஏறாவூர் பகுதியில் ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலயம்...

2025-03-19 11:10:32
news-image

புதிதாக சிந்திப்போம், புதுமை காண்போம் வழிகாட்டல்...

2025-03-19 11:07:05
news-image

நகை கடையிலிருந்து தங்கச் சங்கிலிகளை திருடிச்...

2025-03-19 11:12:28
news-image

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 11,081 குடும்பங்களுக்கு காணிகள்...

2025-03-19 11:09:33
news-image

வீட்டிலிருந்த அங்கவீனரை கொலை செய்து பெறுமதியான...

2025-03-19 11:37:11
news-image

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக...

2025-03-19 10:08:17
news-image

பா. உ. அர்ச்சுனாவால் தேசிய நல்லிணக்கத்திற்கு...

2025-03-19 10:59:36