ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நவதானிய பரிகாரம்

Published By: Digital Desk 7

02 Dec, 2024 | 05:15 PM
image

இன்றைய சூழலில் எம்மில் பலரும் கடுமையாக உழைத்து, கடந்த தசாப்தங்களில் எம்முடைய பெற்றோர்கள் ஈட்டிய வருவாயை விட மாதந்தோறும் அதிக அளவில் சம்பாதிக்கிறார்கள். ஆனால் கடந்த காலங்களில் குடும்பம் என்ற அமைப்பில் இருந்த மகிழ்ச்சியும், மன நிறைவும் தற்போது இல்லை. இதற்கு குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒரு காரணம் என்று அவதானித்த கடந்த தலைமுறையினர் தங்களுடைய குடும்பங்களை சிறிய அளவில் அதாவது நாம் இருவர் நமக்கு இருவர் என்று வடிவமைத்துக் கொண்டனர்.

ஆனால் அதன் பின்னரும் குடும்பம் என்ற அமைப்பில் வருவாய் அதிகமாக இருந்தாலும் மகிழ்ச்சி என்பது மிக மிக குறைவாகவே இருக்கிறது. இதற்கு முதன்மையான காரணம் ஆரோக்கியமின்மை அதாவது நோயால் பாதிக்கப்பட்டிருப்பது.

சம்பாதிப்பதில் கவனம் செலுத்துவதால் இளைய தலைமுறையினர் அகால வேலைகளில் விருப்பத்திற்குரிய உணவை அளவுக்கு அதிகமாக பசியாறுகிறார்கள். இதனால் உடல் ஆரோக்கியம் கெடுகிறது. முதுமையில் வர வேண்டிய பல முதுமை கால நோய்களை இளமையின் மத்திம வயதிலேயே எதிர்கொள்கிறார்கள். 

அதிலும் எம்மில் சிலர் மாதந்தோறும் மருத்துவ செலவை கணிசமாக செய்து வருகிறார்கள். ஆனாலும் ஆரோக்கியம் என்பது முழுமையாக கிடைப்பதில்லை. தற்காலிக நிவாரணங்கள் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் எம்முடைய முன்னோர்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், ஆரோக்கியம் கெடாமல் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியுடன் இருக்கவும் எளிமையான ஒரு வழிமுறையை முன்மொழிந்திருக்கிறார்கள். 

இதற்கு தேவையான பொருட்கள் : நவதானியங்கள் (ஒவ்வொரு நவதானியத்திலும் 500 கிராம் அளவு.)

- செவ்வக வடிவிலான மஞ்சள் வண்ண துணி.  

செவ்வக வடிவிலான மஞ்சள் வண்ண  துணியில் நவதானியங்களை (500 கிராம் X 9  - நான்கரை கிலோ) கொட்டி அதனை ஒரு சிறிய மூட்டையாக வடிவமைத்துக்கொள்ளுங்கள். இந்த மூட்டையை வியாழக்கிழமைகளில் காலை 6:00 மணி முதல் 7 மணி வரையில் தயார் செய்து கொள்ளுங்கள்.

இதனை அன்று இரவு உறங்கும் போது உங்களுடைய படுக்கையில் தலையணையாக வைத்துக் கொள்ளுங்கள். அதாவது நவதானிய தலையணையை உறங்குவதற்காக பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதனை தலையணையாக பயன்படுத்தி உறங்குவதற்கு முன் மனதில், 'எம்மை பீடித்திருக்கும் சுகவீனங்கள்- நாட்டப்பட்ட பாதிப்புகள்- அனைத்தும் தீர்ந்து ஆரோக்கியம் மேம்பட வேண்டும்.

ஆரோக்கியம் முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும்' என பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். மறுநாள் காலையில் அந்த நவதானிய தலையணையை தனியாக எடுத்து வைத்து விடுங்கள். அதனைத் தொடர்ந்து அடுத்து வரும் வியாழக்கிழமை இரவும் அதே நவதானிய தலையணையை பயன்படுத்தி மீண்டும் அதே பிரார்த்தனையை செய்து கொண்டு உறங்குங்கள்.

இதேபோன்று மூன்று வியாழக்கிழமைகளில் இதனை அதாவது நவதானிய தலையணையில் உறங்கவும் . மூன்றாவது வியாழக்கிழமைக்கு பிறகு வரும் வெள்ளிக்கிழமை காலையில் 6:00 மணி முதல் ஏழு மணி வரை உள்ள சுக்கிர ஹோரையில் அந்த நவதானியங்களை அருகில் உள்ள கோசாலைக்கு தானமாக வழங்கி விடுங்கள்.

அல்லது உங்களது வீட்டிற்கு அருகே இருக்கும் பசு மாட்டிற்கு உணவாக வழங்கி விடுங்கள். இதனை நீங்கள் மேற்கொள்ளும்போது உங்களுடைய உடலில் உள்ள நோய் எதிர்ப்பு திறன் நவ தானியங்களில் உள்ள சூட்சம ஆற்றல்களால் தூண்டப்பட்டு, ஆரோக்கியம் மேம்படுகிறது. அதன் பிறகு நீங்கள் வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெறும் நாட்களும், அவகாசமும் குறையும். நீங்கள் பெறும் சிகிச்சைக்கு பலனும் கிடைக்கும். 

கடந்த தலைமுறையில் எம்முடைய முன்னோர்கள் ஒரு சொலவாடையை பாவிப்பார்கள். அதாவது 'சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்' அதாவது நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் உங்களது குடும்பத்திற்காக உழைக்க முடியும். எனவே ஆரோக்கியம் என்பது தான் முதன்மையான செல்வம்.

இதனை மீட்பதற்காக எம்முடைய முன்னோர்கள் முன்மொழிந்த நவ தானியங்களை கொண்டு ஆரோக்கியத்தை மேம்படுத்தும் எளிய வழிமுறையை கடைபிடித்து, ஆயுள் முழுவதும் ஆரோக்கியத்துடன் வாழுங்கள். 

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செல்லப் பிராணியை எப்போது வாங்கலாம்?

2025-01-15 17:39:12
news-image

ஒவ்வொருவரும் நாளாந்தம் பின்பற்ற வேண்டிய ஆன்மீக...

2025-01-13 15:56:39
news-image

குலதெய்வத்தின் அருளை பெறுவதற்கு எளிமையான வழிமுறை..!?

2025-01-09 15:26:03
news-image

எதிர்மறை ஆற்றலை அழித்து செல்வத்தை குவிக்கும்...

2025-01-08 19:26:11
news-image

கல்வியில் தேர்ச்சி பெறுவதற்கான எளிய குறிப்புகள்..!?

2025-01-07 16:03:17
news-image

ஆகமி கிரகத்தின் அருளை பெறுவதற்கான சூட்சம...

2025-01-06 16:36:08
news-image

சொந்த வீட்டு கனவை நனவாக்கும் சூட்சம...

2025-01-05 17:49:20
news-image

நாம் அனைவரும் சாதிப்பதற்கான சூட்சம குறிப்பு..!?

2025-01-03 16:55:59
news-image

சனியின் தாக்கத்தை குறைக்கும் எள்ளுருண்டை !

2024-12-31 15:15:31
news-image

2025 ஆங்கில புத்தாண்டு சிறப்பு ராசி...

2024-12-30 17:51:14
news-image

கடனை தீர்ப்பதற்கு உதவும் நெல்லிக்காய்..!?

2024-12-30 13:02:21
news-image

விளக்கேற்ற பயன்படுத்தும் திரிகளின் மறைமுக ஆற்றல்கள்

2024-12-28 18:47:05