எம்முடைய கழுத்துப் பகுதியில் அமைந்திருக்கும் தைரொய்ட் எனும் சுரப்பியில் விவரிக்க இயலாத காரணங்களால் ஏற்பட்டிருக்கும் புற்றுநோய் அல்லாத கட்டியை கதிரியக்க அதிர்வலை சிகிச்சை மூலம் அகற்றி நிவாரணம் அளிக்க முடியும் என வைத்திய நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
ஆண்களை விட பெண்களுக்கு அதிக அளவில் தைரொய்ட் சுரப்பியில் புற்றுநோய் அல்லாத கட்டி பாதிப்பு ஏற்படுவதாக அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. பொதுவாக தைரொய்ட் சுரப்பி பகுதியில் ஏதேனும் கட்டி பாதிப்பு ஏற்பட்டிருந்தால் சோர்வு, படபடப்பு ,இதய வலி, நினைவுத்திறன் இழப்பு, மலச்சிக்கல், தோல் வறட்சி, முடி உதிர்வு, எடை குறைவு , சீரற்ற மாதவிடாய் போன்ற அறிகுறிகள் ஏற்படக்கூடும்.
பெண்களில் மிக சிலருக்கும் ஆண்களில் சிலருக்கும் தைரொய்ட் சுரப்பியில் ஏற்படும் கட்டிகள் புற்றுநோய் கட்டியாக மாறக்கூடிய அபாயம் உண்டு. இதனால் குரலில் மாற்றம், விழுங்குவதில் சிரமம் போன்ற பாதிப்புகள் இருந்தால் உடனடியாக வைத்தியரை சந்தித்து ஆலோசனையும், அவர் பரிந்துரைக்கும் பரிசோதனையும் மேற்கொள்ள வேண்டும்.
பரிசோதனையில் தைரொய்ட் சுரப்பியில் புற்றுநோய் அல்லாத கட்டிகள் ஏற்பட்டிருந்தால் அதனை கதிரியக்க அதிர்வலை சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணம் பெற முடியும்.
இத்தகைய சிகிச்சையின் போது வைத்தியர்கள் பிரத்யேகமான முறையில் நுண் துளை சத்திர சிகிச்சை மூலம் தையொய்ட் சுரப்பி அமைந்துள்ள கழுத்துப் பகுதியில் நுண்ணிய குழாயை உசட்செலுத்தி, அதனூடாக கதிரியக்க அதிர்வலை மூலம் புற்றுநோய் அல்லாத கட்டியை அகற்றி நிவாரணம் வழங்குவார்கள்.
இத்தகைய சிகிச்சை 45 நிமிடங்களில் மட்டுமே நடைபெறுகிறது. அதன் பிறகு அவர்களுக்கு விரைவாக நிவாரணம் கிடைத்து, இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகிறார்கள்.
வைத்தியர் சண்முகசுந்தரம்
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM