நுவரெலியா பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட பொது மக்கள்!

02 Dec, 2024 | 01:13 PM
image

நுவரெலியா பிரதேச செயலகத்தில் வழங்கப்படும் இரண்டாம் கட்ட புதிய அஸ்வெசும நலன்புரித் திட்ட கொடுப்பனவுக்கான விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்வதற்காக ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்துள்ளனர்.

சனி மற்றும் ஞாயிறு தினங்கள் விடுமுறை என்பதால் இன்று திங்கட்கிழமை (02) நுவரெலியா பிரதேச செயலகத்துக்கு முன்னால் அஸ்வெசும நலன்புரித் திட்ட கொடுப்பனவுக்கான விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்வதற்காக பிரதேச மக்கள் ஒரே நேரத்தில் கூடியுள்ளனர்.

எனினும் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவங்கள் விநியோகிக்கும் நடவடிக்கை உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை எனவும் வரிசையினை நெறிப்படுத்துவதற்கான செயற்பாடுகளில் திணைக்கள உத்தியோகத்தர்கள் யாரும் செயற்படவில்லை எனவும் நலன்புரி கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வதற்கு சரியான நடைமுறை பின்பற்றப்படவில்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களில் பெய்த கடும் மழை காரணமாக கடந்த வாரங்களில் பொது மக்களின் வருகை சற்று குறைவாக இருந்தது. தற்போது சீரான வானிலை நிலவி வருவதனால் பெருந்திரளானோர் வருகை தந்ததால் சன நெரிசல்  ஏற்பட்டுள்ளதாகவும் அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரஷ்ய இராணுவத்தில் பலவந்தமாக இணைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை...

2025-01-22 16:57:24
news-image

மாகாண திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது மாகாண...

2025-01-22 20:19:28
news-image

அம்பலந்தோட்டையில் துப்பாக்கிச் சூடு

2025-01-22 23:00:13
news-image

கொலன்னாவை வீட்டுத்திட்டத்தில் எஞ்சியிருக்கும் வீடுகளை பெற்றுக்கொடுக்க...

2025-01-22 17:10:47
news-image

சீனாவின் 500 மில்லியன் யுவான் நன்கொடை...

2025-01-22 20:50:37
news-image

அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலை செயற்திட்டம்...

2025-01-22 20:22:05
news-image

சட்டத்தை மீறினால் அரிசி ஆலைகள் இராணுவத்தின்...

2025-01-22 16:59:58
news-image

அரச சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரித்தால் பெருந்தோட்ட...

2025-01-22 20:48:59
news-image

கொலன்னாவையில் வீடுகள் உடைக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண...

2025-01-22 17:00:41
news-image

உள்ளூராட்சி மன்றத்தேர்தலைத் தொடர்ந்து அரசியலமைப்பு திருத்தம்...

2025-01-22 20:20:43
news-image

அஸ்வெசும என்பதன் தமிழாக்கம் என்ன ?...

2025-01-22 20:53:27
news-image

நாகப்பட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்கும் இடையே விரைவில் சரக்குக்...

2025-01-22 21:13:08