மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி : பெண்ணும் இரு சிறுவர்களும் காயம்

Published By: Digital Desk 7

02 Dec, 2024 | 10:57 AM
image

கொழும்பு - நீர்கொழும்பு வீதியில் லியனகேமுல்ல பகுதியில்  நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பெண்ணொருவரும் இரண்டு சிறுவர்களும் காயமடைந்துள்ளதாக  சீதுவை பொலிஸார் தெரிவித்தனர்.

செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மின்கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நீர்கொழும்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் செலுத்துனரும் பின்புறத்தில் அமர்ந்திருந்த பெண்ணும் இரண்டு சிறுவர்களும் காயமடைந்துள்ள நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

முதுகடுவ, மாரவில பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சட்டவவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் வண்டியை...

2025-03-20 14:04:55
news-image

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் திகதி...

2025-03-20 13:49:47
news-image

சிறிய சிவனொளிபாதமலையிலிருந்து கீழே தவறி விழுந்து...

2025-03-20 13:27:55
news-image

காசாவுக்கான மின்சார விநியோகத்தை துண்டித்தது இஸ்ரேல்...

2025-03-20 13:55:42
news-image

“ரன் மல்லி”யின் நண்பன் ஹெரோயினுடன் கைது

2025-03-20 13:11:36
news-image

உள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தல் ;...

2025-03-20 13:19:18
news-image

ஏப்ரல் மாதம் முதல் பால் தேநீரின்...

2025-03-20 12:40:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-20 12:23:33
news-image

தேசபந்து தென்னக்கோனின் வீடு ஒரு வடிசாரய...

2025-03-20 12:06:24
news-image

கணேமுல்ல பகுதியில் சட்டவிராத மதுபானத்துடன் ஒருவர்...

2025-03-20 12:03:15
news-image

வாய்ப் புற்றுநோயை ஏற்படுத்தும் புகையிலை பாவனை

2025-03-20 12:10:51
news-image

யாழில் காணாமல்போன மீனவர்கள் இராமநாமபுரம் கடலில்...

2025-03-20 11:35:39