செல்பி (சுய புகைப்படம் எடுப்பது) ஒரு மனநலப் பிரச்சினை என அமெரிக்க மனநல சங்கம் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

இவ்வாறு சுய புகைப்படம் எடுப்பது தன்னைப் பற்றிய உயர்வு மனப்பான்மையிலான குறைப்பாடு மற்றும் நெருக்கமான நட்புறவுகளிலான இடைவெளி என்பவற்றை மூடி மறைக்க சுயமாக புகைப்படமெடுத்து சமூக இணையத்தளங்களில் வெளியிடுவதற்கு நிர்ப்பந்திக்கும் ஆவலால் ஆட்டிப்படைக்கிற செல்பிரிஸ் என அழைக்கப்படும் மன ஒழுங்கீனம் என அந்த சங்கம் தெரிவிக்கிறது.

மேற்படி செல்பி எடுக்கும் மன ஒழுங்கீனத்தை எல்லைக்கோட்டு செல்பிரிஸ், கடுமையான செல்பிரிஸ் மற்றும் நீண்ட கால நாட்பட்ட செல்பிரிஸ் என மூன்று வகைகளாக அமெரிக்க மனநல சங்கம் வகைப்படுத்தியுள்ளது.

ஒருவர் தினசரி குறைந்தது 3 தடவைகள் புகைப்படமெடுக்கும் அதேசமயம் அந்தப் புகைப்படங்களை சமூக இணையத்தளங்களில் வெளியிடாதிருப்பாராயின் அவருக்கு ஏற்பட்டுள்ள மனநல பாதிப்பு எல்லைக் கோட்டு செல்பிரிஸ் வகையைச் சேர்ந்ததாகும்.

மேலும் ஒருவர் தினசரி குறைந்தது 3 தடவைகள் புகைப்படமெடுப்பதுடன் அந்தப் புகைப்படங்கள் ஒவ்வொன்றையும் சமூக இணையத்தளங்களில் வெளியிடுவாராயின் அவருக்கு ஏற்பட்டுள்ள மனநல பாதிப்பு கடுமையான செல்பிரிஸ் வகையைச் சேர்ந்ததாகும்.

அதேசமயம் ஒருவர் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் கிடைக்கும் நேரமெல்லாம் தன்னைப் புகைப்படமெடுத்து அந்தப் புகைப்படங்களை ஒரு நாளில் 6 தடவைகளுக்கு மேல் சமூக இணையத்தளங்களில் அனுப்புவாராயின் அவருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு நீண்ட கால செல்பிரிஸ் பாதிப்பாகும்.

இத்தகைய பாதிப்புகளுக்கு உள்ளானவர்களைக் குணப்படுத்துவதற்கு தற்போது சிகிச்சை எதுவும் இல்லை எனவும் எனினும் இந்தப் பாதிப்புக்கு நடைமுறையிலுள்ள அறிவியல் நடத்தை சிகிச்சையூடாக தற்காலிக சிகிச்சை அளிக்கப்படலாம் எனவும் அமெரிக்க மனநல சங்கம் கூறுகிறது.