மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் குழுவினர் மன்னார் விஜயம்

Published By: Vishnu

02 Dec, 2024 | 02:05 AM
image

மன்னாரில் வெள்ளப்பெருக்கால் பாதிப்படைந்து தொடர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் பாதுகாப்பு மையங்களில் தங்கி வாழும் மக்களை மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்கள் தலைமையில் வந்த குழுவினர் இம் மக்களை சந்தித்தித்து அத்தியாவசிய பொருட்களை வழங்கி வைத்தனர்.

ஞாயிற்றுக் கிழமை (01) மன்னாருக்கு வருகை தந்திருந்த இக்குழுவில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் வைத்திய கலாநிதி நாமல் லக்ஸமன , பாராளுமன்ற உறுப்பினர் சமன்வெளி குணசிங்க அமைச்சின் செயலாளர்கள் உட்பட இவர்களுடன் மன்னார் நகர் பிரதேச செயலாளர் எம் பிரதீப் மற்றும் மன்னார் மாவட்ட செயலக மேலதிக செயலாளர் (காணி) ஸ்ரீஸ்கந்தகுமார் ஆகியோரும் இணைந்து இடம்பெயர்ந்து தங்கியுள்ள மக்களை எழுத்தூர் செல்வநகர் , இங்குள்ள இந்து ஆலயம் . புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களுக்கு விஜயத்தை மேற்கொண்டு அங்குள்ள மக்களை சந்தித்து உரையாடியதுடன் நிறுவனங்களால் கொண்டு வரப்பட்ட  மருத்துவ மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து தாழ்வுபாட்டு வீதியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் பெண்கள் சந்திப்பு ஒன்றும் இடம்பெற்றது.

இங்கு விஜயத்தை மேற்கொண்ட மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் மக்கள் மத்தியில் உரையாற்றும்போது;

அரசு பொறுப்பேற்றதுடன் மக்களுக்கு நிறைய அபிவிருத்தி வேலைகளை செய்ய வேண்டும் என்ற அபிலாசையில் இருந்து வருகின்றது.

தற்பொழுதுள்ள காலநிலை மாற்றம் காரணமாக எமது மக்கள் வெள்ளத்தினால் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். இதனால் இவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டிய கட்டாயத்துக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்.

பாதிப்டைந்துள்ள மக்களின் வாழ்வை நாம் மீளக் கட்டியெழுப்ப வேண்டும்.  அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் இதற்கு துணைபுரிய வேண்டிய அவசியம் உண்டு.

பாதிப்டைந்துள்ள நீங்கள் மீளக்குடியேற பிரதேச செயலகங்கள் மாவட்ட செயலகம் மற்றும் அணைத்து அமைச்சுக்களும் யாவரும் ஒன்றிணைந்து செயல்பட இருக்கின்றோம்.

பாதைகள் உங்கள் இல்லங்கள் மற்றும் உங்கள் அன்றாட உணவு விடயங்கள் சுகாதார தேவைகள் போன்றவற்றில் இந்த அரசு கவனம் செலுத்தி தீவிரமாக செயற்படுத்தி வருகின்றது.

இத்துடன் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் ஊடாக சுகாதார தேவைகள் உணவு பொதிகள் வழங்கப்படுகின்றன.

இத்துடன் ஏனைய நிவாரணங்களும் வழங்கப்படுகின்றன. பெண்களுக்கு சிறுவர்களுக்கு தேவையான சுகாதார தேவைகளையும் கண்காணித்து பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சும் இதற்கு துணையாக ஜெயிக்கா நிறுவனம் ,  சாக் நிறுவனம் மற்றும் யுஎன்டிபி நிறுவனங்கள் உதவி புரிகின்றன.

இதை வழங்குவதற்காகவே நாங்கள் மன்னாருக்கு வருகை தந்து ஞாயிற்றுக்கிழமை (01) இதை இங்கு செயற்படுத்துகின்றோம் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் இவ்வாறு மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான டாக்டர்...

2025-01-24 16:17:53
news-image

இலங்கை - ஐக்கிய இராஜ்ஜிய பாராளுமன்ற...

2025-01-24 16:19:06
news-image

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரத போராட்டத்துக்கு...

2025-01-24 20:47:48
news-image

சுகாதார தொழிற்சங்கங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு...

2025-01-24 16:11:11
news-image

வடபகுதி கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்ப்பதற்கு...

2025-01-24 19:49:07
news-image

அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களுக்கான சலுகைகள் குறித்து...

2025-01-24 16:54:16
news-image

பொரளை ஆயுர்வேத தேசிய வைத்தியசாலையை தேசிய...

2025-01-24 18:29:40
news-image

இலங்கை அரசாங்கம் காற்றாலை மின் உற்பத்தி...

2025-01-24 17:29:17
news-image

மோட்டார் சைக்கிள்களில் போதைப்பொருள் விற்பனை ;...

2025-01-24 17:01:16
news-image

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின்...

2025-01-24 17:08:17
news-image

மஹரகம ரயில் நிலையத்திற்கு அருகில் ஹெரோயினுடன்...

2025-01-24 16:26:51
news-image

பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது - அடிப்படை உரிமை...

2025-01-24 16:17:44