(நெவில் அன்தனி)
அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவந்த 8 அணிகளுக்கு இடையிலான மகளிர் பிக் பாஷ் லீக் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் முதல் தடவையாக மெல்பர்ன் ரெனகேட்ஸ் மகளிர் அணி சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.
மெல்பர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் பிறிஸ்பேன் ஹீட் மகளிர் அணியை டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் 7 ஓட்டங்களால் வெற்றிகொண்டு பிறிஸ்பேன் ரெனகேட்ஸ் மகளிர் அணி சம்பியனானது.
மேற்கிந்தியத் தீவுகள் வீராங்கனை ஹெய்லி மெத்யூஸ் சகல துறைகளிலும் பிரகாசித்து மெல்பேர்ன் ரெனகேட்ஸ் மகளிர் அணியை சம்பியனாக்கினார்.
அரைச் சதம் குவித்த ஹெய்லி மெத்யூஸ் 2 விக்கெட்களையும் கைப்பற்றி ஆட்டநாயகி விருதை வென்றெடுத்தார்.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட மெல்பர்ன் ரெனகேட்ஸ் மகளிர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 141 ஓட்டங்களைப் பெற்றது.
ஆரம்ப வீராங்கனை ஹெய்லி மெத்யூஸ் 8 பவுண்டறிகள் உட்பட 69 ஓட்டங்களைப் பெற்றார். அவரைவிட ஜோர்ஜியா வெயாஹாம் 21 ஓட்டங்களையும் நயோமி ஸ்டோலன்பேர்க் 16 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் சார்லி நொட் 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் க்றேஸ் பார்சன்ஸ் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
142 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பிறிஸ்பேன் ஹீட் மகளிர் அணி 3.2 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 19 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது பிற்பகல் 3.15 மணிக்கு பெய்த கடும் மழையினால் ஆட்டம் தடைப்பட்டது.
அரை மணித்தியாலங்கள் கழித்து ஆட்டம் மீண்டும் தொடர்ந்தபோது பிறிஸ்பேன் ஹீட் மகளிர் அணியின் வெற்றி இலக்கு 12 ஓவர்களில் 98 ஓட்டங்கள் என்ற திருத்தப்பட்ட வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய பிறிஸ்பேன் ஹீட் மகளிர் அணி 12 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 96 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
அணித் தலைவி ஜெஸ் ஜோனாசன் தனித்து போராடி ஆட்டம் இழக்காமல் 44 ஓட்டங்களை அதிகப்பட்சமாக பெற்றார்.
அவரைவிட ஜோர்ஜியா ரெட்மெய்ன் 16 ஓட்டங்களையும் நிக்கோலா ஹான்கொக் ஆட்டம் இழக்காமல் 13 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் ஹெய்லி மெத்யூஸ் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM