எரிபொருள் விலை குறைப்பு நியாயமற்றது இந்த அரசாங்கமும் மக்களை சுரண்டி பிழைக்கிறது - ஒன்றிணைந்த தொழிற்சங்கம் கடும் சாடல்

Published By: Vishnu

01 Dec, 2024 | 08:47 PM
image

(இராஜதுரை ஹஷான்)

எரிபொருள் இறக்குமதியின் போது முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கு சென்ற தரகுப்பணம் தற்போதைய அரசாங்கத்துக்கும் செல்கிறது. இந்த மக்களை சுரண்டி பிழைக்கிறது. பெருந்தோட்ட மக்களின் பிரதிநிதியான அம்பிகா சுகமா என்று வினவுகிறோம் என ஐக்கிய ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் ஊடக பேச்சாளர் ஆனந்த பாலித்த தெரிவித்தார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

முன்னாள் மின்சக்தி மற்றும் சக்தி வலு அமைச்சர் மோசடியான முறையில் அமுல்படுத்தி எரிபொருள் விலைச்சூத்திரத்தையே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் அமுல்படுத்துகிறது.

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சர் சுனில் அந்துனெத்தி ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தமது கட்சி ஆட்சிக்கு வந்தால் 120 ரூபாவுக்கு ஒரு லீற்றர் பெற்றோலை விநியோகிப்பதாகவும், ஓரிரு மாதங்களுக்கு பின்னர் துறைமுகத்துக்கு இறக்குமதி செய்யப்படும் போது நிர்ணயிக்கப்படும் விலைக்கு அமைவாகவே எரிபொருளின் விலை நிர்ணயிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில் 24 மணித்தியாலங்களில் எரிபொருள் விலை குறைப்பதாக குறிப்பிட்ட விடயம் மறக்கடிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரங்களில் பேசுவதற்கும், அரச நிர்வாகத்தை முன்னெடுப்பதற்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படும் என்பதை அரசாங்கம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

எரிபொருள்  இறக்குமதியின் போது முன்னாள் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கு சென்ற தரகுப்பணம் இந்த அரசாங்கத்துக்கும் செல்கிறது. இந்த அரசாங்கமும் மக்களை சுரண்டிப் பிழைக்கிறது. வாழ்க்கைச் செலவுகளை குறைப்பதாக குறிப்பிட்ட வாக்குறுதிகள் அனைத்தும் வெறும் தேர்தல் பிரச்சாரமாக மாற்றமடைந்துள்ளது.

 பெருந்தோட்ட மக்களை அரசாங்கம் கவனத்திற் கொள்ளவில்லை. மண்ணெண்ணையின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்ட மக்களின் பிரதிநிதிகளான அம்பிகாவிடம் தற்போது சுகமா என்று வினவுகிறோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நெல்லுக்கான உத்தரவாத விலையை 140 ரூபாவாக...

2025-01-24 16:53:17
news-image

புகையிரத ஆசனங்களை இணையத்தில் முன்பதிவு செய்து...

2025-01-24 22:22:24
news-image

காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான டாக்டர்...

2025-01-24 16:17:53
news-image

இலங்கை - ஐக்கிய இராஜ்ஜிய பாராளுமன்ற...

2025-01-24 16:19:06
news-image

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரத போராட்டத்துக்கு...

2025-01-24 20:47:48
news-image

சுகாதார தொழிற்சங்கங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு...

2025-01-24 16:11:11
news-image

வடபகுதி கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்ப்பதற்கு...

2025-01-24 19:49:07
news-image

அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களுக்கான சலுகைகள் குறித்து...

2025-01-24 16:54:16
news-image

பொரளை ஆயுர்வேத தேசிய வைத்தியசாலையை தேசிய...

2025-01-24 18:29:40
news-image

இலங்கை அரசாங்கம் காற்றாலை மின் உற்பத்தி...

2025-01-24 17:29:17
news-image

மோட்டார் சைக்கிள்களில் போதைப்பொருள் விற்பனை ;...

2025-01-24 17:01:16
news-image

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின்...

2025-01-24 17:08:17