ஏறாவூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீரர் மகேஷ் திக்சனவின் இரண்டு இலட்சம் ரூபா நிதி உதவியில் ஏறாவூர் யங் ஹீரோ விளையாட்டுக் கழகம் நிவாரணப் பொருட்கள் அடங்கிய 100 பொதிகளை வழங்கிவைத்தது.
ஏறாவூரில் நிலவிய சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிலைப்பாட்டினை அறிந்து இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீரர் மகேஷ் திக்சனாவிடம் ஏறாவூர் யங் ஹீரோ விளையாட்டுக் கழகத்தின் சிரேஷ்ட உறுப்பினரும் இலங்கை பொலிஸ் அணி மற்றும் பேஷ்போல் விளையாட்டு வீரருமான யு. நஜிவுல்லாஹ் சமூக வலைத்தளத்தின் ஊடாக விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய மகேஷ் திக்சன 2 இலட்சம் நிதி உதவி வழங்கினார்.
இதற்கமைய யங் ஹீரோ விளையாட்டுக் கழகம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள 100 குழந்தைகளை தெரிவு செய்து அவர்களுக்கு தலா இரண்டாயிரம் ரூபா பெறுமதியான பால்மா மற்றும் இதர பொருட்கள் அடங்கிய பொதிகளை வழங்கிவைத்தது.
இதேவேளை இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் மகேஷ் திக்சனா வழங்கிய உயரிய மனிதநேய பணிக்கு விளையாட்டு கழகம் நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM