வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்; சுற்றிலும் பாம்புகள்! - வீடு திரும்ப அச்சப்படும் சங்கானை மக்கள்

Published By: Digital Desk 7

01 Dec, 2024 | 07:02 PM
image

வெள்ள அனர்த்தம் காரணமாக வட்டுக்கோட்டை இந்து கல்லூரியில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 20 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் சங்கானை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஜே /57 கிராம சேவகர் பிரிவில் வசிப்பவர்கள் ஆவர்.

தமது வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதாகவும், வீட்டை சுற்றி பாம்புகள் திரிவதாகவும் கூறுகின்ற அவர்கள், இந்த பிரச்சினைகளை சீர்செய்தால் மட்டுமே தங்களால் வீடுகளுக்குச் செல்ல முடியும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

ஒவ்வொரு வருடமும் மழைக் காலத்தில் இவ்வாறான பிரச்சினைகள் காணப்படுவதாகவும், இதற்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்