தலங்கமையில் மோட்டார் சைக்கிள் மோதி பெண் உயிரிழப்பு

Published By: Digital Desk 2

01 Dec, 2024 | 06:23 PM
image

தலங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடுவல - கொள்ளுப்பிட்டி பிரதான வீதியில் தலங்கம வடக்குப் பகுதியில் நேற்று சனிக்கிழமை (30) மோட்டார் சைக்கிள் மோதி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் தலங்கம வடக்கைச் சேர்ந்த 74 வயதானவர் ஆவார். 

கடுவல பகுதியிலிருந்து பத்தரமுல்லை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியைக் கடந்து சென்ற பெண் மீது மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த பெண் தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும் விபத்தில் காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென்னை மரங்களை வெட்டுவதற்கு அனுமதி அவசியம்

2025-01-24 09:16:05
news-image

துறைமுகத்தில் சிக்கிக்கொண்டிருக்கும் 3 ஆயிரம் கொள்கலன்களை...

2025-01-24 09:33:43
news-image

10ஆவது பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்காக...

2025-01-24 09:18:16
news-image

கல்கிஸ்ஸ பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர்...

2025-01-24 09:05:29
news-image

பெய்ரா ஏரியில் இறந்த நிலையில் கரையொதுங்கிய...

2025-01-24 08:12:12
news-image

முன்னாள் ஜனாதிபதிளுக்கு அரச இல்லங்களை விட்டு...

2025-01-24 09:17:25
news-image

இன்றைய வானிலை 

2025-01-24 06:15:28
news-image

கிரேன்பாஸில் பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற...

2025-01-24 03:51:07
news-image

பயணிகள் பேருந்தும், கொள்கலன் லொறியும் மோதி...

2025-01-24 03:41:09
news-image

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உணவு விலையை 450...

2025-01-24 03:32:58
news-image

அரச அதிகாரிகளுக்கு, தேவையான தகமையுடையவருக்கு வழங்கப்படும்...

2025-01-24 03:54:36
news-image

சுவாசநோய் தொடர்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு -...

2025-01-24 03:16:45