(ஆர்.யசி)

Image result for எஸ்.பி. திசாநாயக

வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் செயற்பாடுகள் இனவாதத்தின்  உச்சகட்டமாக அமைந்துள்ளது. மீண்டும் சர்வதேச அழுத்தங்களுக்குள் அரசாங்கத்தை தள்ளி நல்லிணக்கத்தை குழப்பி அரசாங்கத்தை  சீண்டிப்பார்க்கிறார் என அமைச்சர் எஸ்.பி. திசாநாயக தெரிவித்தார். 

நல்லிணக்க நகர்வில் அரசாங்கதின் செயற்பாடுகளுக்கு சர்வதேசம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதை வடக்கு முதல்வர் சர்வதேச தரப்புக்கு சுட்டிக்காட்டியுள்ள நிலையில் அரசாங்கம் எவ்வாறான நகர்வுகளை மேற்கொள்ளவுள்ளது என வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.