ஆர்.ராம்
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சுவிட்சர்லாந்தின் நீதி மற்றும் பொலிஸ் பெடரல் திணைக்களத்தின் கீழ் செயற்படும் குடிப்பெயர்வுக்கான இராஜங்கச் செயலகத்தின் அதிகாரிகளான மெய்ன்ரட் லிண்ட், ஆண்ட்ரியாஸ் ஷ்மிட் மற்றும் ஜீனைன் மைர் உட்பட சுவிட்சர்லாந்து தூதரகத்தின் டோரிஸ் மேனர் மற்றும் சுஷாந்தி கோபாலகிருஷ்ணன் ஆகியோர் வடக்கு, கிழக்கிற்கு விஜயம் மேற்கொண்டு கள ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் முதலில் கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்திருந்ததோடு அங்குள்ள சிவில் தரப்பினர் உட்பட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து உரையாடியுள்ளனர். அத்துடன், மாவீரர்கள் நாளன்று நினைவேந்தல் நிகழ்வுக்கு முன்னுள்ள சூழல்களையும் கவனத்தில் கொண்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து வடக்குரூபவ்மாகாணத்துக்குச் சென்றவர்கள் அங்கும் சிவில் தரப்பினர், வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் உள்ளிட்டோரைச் சந்தித்து உரையாடியுள்ளனர். இதன்போது சுவிட்சர்லாந்துக்கு கிடைக்கும் குடியேற்றக்கோரிக்கைகளில் 40சதவீதமானவை இலங்கையிலிருந்து கிடைக்கின்றன என்றும் அவற்றில் 20 முதல் 30சதவீதமானவை வடக்கு இளையோரிடமிருந்தே வருவதாகவும் குறித்த அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அச்சமயத்தில்ரூபவ் அரசியல் ரீதியாக காணப்படுகின்ற நிச்சயமற்ற நிலையும் , தொழில்வாய்ப்பு, உயர்கல்வி உள்ளிட்ட விடயங்கள் காரணமாகவும் அவ்விதமான நிலைமைகள் ஏற்படுவதாக சிவில் சமூகத் தரப்பினர் குறிப்பிட்டதோடுரூபவ் பயங்கரவாத தடைச்சட்டம் அமுலில் இருப்பதும் இளையோருக்கான அச்சமான வாழ்க்கைக்கு காரணமாக அமைக்கின்றது என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் பவாந்தராஜா மற்றும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஆகியோரையும் அவர்கள் சந்தித்து உரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM