முல்லைத்தீவில் 23,930 ஏக்கர் வயல் நிலங்கள் வெள்ளத்தில்! ; பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடுகள் வழங்கப்படவேண்டும் - ரவிகரன் எம்.பி

Published By: Digital Desk 7

01 Dec, 2024 | 09:56 AM
image

முல்லைத்தீவு மாவட்டத்தில் 23,930 ஏக்கர் பெரும்போக நெற்செய்கை கனமழை காரணமாக வெள்ள நீரில் மூழ்கிக் காணப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் ஆர்.பரணீகரன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குரிய இழப்பீடுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே இந்த விடயங்கள் பேசப்பட்டுள்ளன.

அங்கு முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்கள உதவி ஆணையாளர் கருத்துத் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் 23,930 ஏக்கர் வயல் நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.

வயல் நிலங்களில் தொடர்ந்தும் வெள்ள நீர் தேங்கியிருக்கிறதா என்பதை அவதானித்தே, பாதிப்பு நிலைமைகள் குறித்து மதிப்பீடு செய்ய முடியும்.

தற்போது மழைவீழ்ச்சி அளவு குறைந்திருப்பதால் வயல்நிலங்களை மூடியிருக்கின்ற வெள்ள நீர் படிப்படியாக குறைவடைகின்றபோது, தற்போது எதிர்பார்க்கப்படுகின்ற பாதிப்பு நிலைமையை விட, பாதிப்பு நிலைமைகள் குறையக்கூடும் என நம்புகிறோம் என்று தெரிவித்தார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,

விவசாய பாதிப்பு நிலைமைகளை மதிப்பீடு செய்வதற்கு குறிப்பிட்டளவு நாட்கள் தேவை என திணைக்கள அதிகாரிகள் கூறுவதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம்.

ஆனால், கூடிய விரைவில் விவசாய பாதிப்பு நிலைமைகளை மதிப்பீடு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடுகளை உடனடியாக வழங்க உரிய திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததற்காக...

2026-04-15 02:19:11
news-image

களுவாஞ்சிக்குடியில் இறந்த கோழி இறைச்சி விற்பனை...

2026-04-14 23:42:34
news-image

கம்பஹாவில் பிரதமர் தலைமையில் சிங்கள, தமிழ்...

2026-04-14 19:57:56
news-image

வென்னப்புவ பகுதியில் 'ஹைடொப் துஷார'வின் பிரதான...

2026-04-14 17:38:09
news-image

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் 54 அதிவேக...

2026-04-14 17:20:25
news-image

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம் பெற்ற...

2026-04-14 15:14:44
news-image

வாழைச்சேனையைச் சேர்ந்த குடும்பஸ்தர் நீரில் மூழ்கி...

2026-04-14 15:06:44
news-image

முல்லைத்தீவு தேராவில் பகுதியில் கிணற்றிலிருந்து பெண்ணின்...

2026-04-14 14:56:42
news-image

டித்வா' சூறாவளியினால் சேதமடைந்த, அரசாங்கத்தின் இழப்பீட்டுத்...

2026-04-14 13:34:13
news-image

பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல்...

2026-04-14 14:02:42
news-image

தேசிய மின்கட்டமைப்பைப் பாதுகாக்க சூரிய சக்தி...

2026-04-14 12:58:00
news-image

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பராபவ...

2026-04-14 13:22:07