மது பாவனைக்கு அடிமையான கணவனை திருத்த முயற்சி ; உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிய மனைவி உயிரிழப்பு!

01 Dec, 2024 | 09:18 AM
image

திருகோணமலையி்ல் மது பாவனைக்கு அடிமையான கணவனை திருத்துவதற்காக தன் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிய மனைவி பரிதாபமாக நேற்று சனிக்கிழமை (30) உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை , பாலையூற்று  சேர்ந்த  31 வயதுடைய  ஒரு பிள்ளையின் தாயே  உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த பெண்ணின் கணவர் மதுபாவனைக்கு அடிமையானவர் ஆவார். 

இந்நிலையில், அவரை திருத்துவதற்காக குறித்த பெண் கடந்த 21ஆம் திகதி தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிய வேளை  திடீரென  அவர் மீது தீப்பற்றியது. 

அவரை காப்பாற்ற முயன்ற கணவனின் கை மீதும் தீப்பற்றியது.

இதன்போது இருவரும் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கடந்த 27ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவேளை சிகிச்சை பலனின்றி பெண் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரியால் மேற்கொள்ளப்பட்டது.  

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கணவன் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட மீனவர்களை...

2025-03-26 16:10:42
news-image

பிரபல சிங்கள பாடகர் இராஜ் சி.ஐ.டி.யில்...

2025-03-26 16:08:00
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : ஞானசார...

2025-03-26 15:10:31
news-image

நிதி, கொள்கை வகுத்தல் மற்றும் பொருளாதார...

2025-03-26 16:04:11
news-image

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக...

2025-03-26 16:03:57
news-image

அரச உத்தியோகத்தர்களுக்கு ஏப்ரல் முதல் சம்பள...

2025-03-26 15:22:44
news-image

புத்தாண்டை முன்னிட்டு சலுகை விலையில் உணவுப்பொதி...

2025-03-26 15:12:39
news-image

ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு...

2025-03-26 15:37:56
news-image

கடும் பாதுகாப்புக்கு மத்தியில் “ஹரக் கட்டா”...

2025-03-26 15:20:15
news-image

வெளிநாட்டு அரசாங்கங்களால் துன்புறுத்தப்படும் முன்னாள் ஆயுதப்படையினரை...

2025-03-26 15:16:57
news-image

யோஷித ராஜபக்ஷ : இரவு நேர...

2025-03-26 15:02:06
news-image

ஏப்ரலில் ஸ்டாரிலிங்க் இணையச் சேவை அறிமுகம் 

2025-03-26 14:55:42