பிரபல ஸ்மார்ட் கைத்தொலைபேசி நிறுவனமான மோட்டோ (Moto) நிறுவனத்தினால் இவ்வருடம் முழுவதும் வெளியிடப்படவுள்ள கைத்தொலைபேசிகளின் விபரங்கள் இணையத்தளங்களில் கசிந்துள்ளது.

புதிதாக சந்தைக்கு வரவுள்ள ஸ்மார்ட் கைத்தொலைகேசிகளின் ஒரு சில மொடல்கள் இணையத்தில் உத்தியோகபூர்வமற்ற முறையில் வெளியிடப்படுவது வழக்கமான விடயம். 

ஆனால் 2017ஆம் ஆண்டில் வெளியாக உள்ள லெனோவா - மோட்டோவின் அனைத்து மொடல்கள் குறித்த தகவல்களும் கசிந்துவிட்டன. 

அந்நிறுவனத்தின் அலுவலகக் கூட்டத்தில் வெளியிடப்பட்ட நிகழ்த்துகையின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தளங்களில் வைரலாக பரவிவருகின்றது.

மோட்டோ செட் பிளேவ் (Moto Z Play - 5.5’ FHD, mods), மோட்டோ செட் போர்ஸ் (Moto Z Force - ShatterShield, 1GB LTE, mods), மோட்டோ எக்ஸ் (Moto X - 5.2' FHD, 3D Class, SmartCam), மோட்டோ ஜிஎஸ் (Moto gS - 5.2'FHD, Full Metal), மோட்டோ ஜிஎஸ் பிளஸ் (Moto gS+ - 5.5 FHD, Dual Cam), மோட்டோ ஈ (Moto e - 5' HD, 2.5D/FPS), மோட்டோ பிளஸ் (Moto e Plus - 5.5' HD, 5000 mAh), மோட்டோ சி (Moto C - 5' FW), மோட்டோ சி பிளஸ் (Moto C Plus - 5' HD, 4000 mAh) போன்ற புதிய கைத்தொலைபேசிகளே இவ்வருடம் வெளியிடவுள்ளதாக குறித்த புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.