நைஜீரியாவில் இடம்பெற்ற படகுவிபத்தில் 30க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
வடநைஜீரியாவில் இடம்பெற்ற படகுவிபத்தில் சிக்கிய 100க்கும் அதிகமானவர்கள் காணாமல்போயுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொகி மாநிலத்திலிருந்து நைஜரை நோக்கி 200க்கும் அதிகமானவர்களுடன் பயணித்துக்கொண்டிருந்த படகே விபத்திற்குள்ளாகியது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
27 பேரின் உடல்களை மீட்டுள்ளோம் சுழியோடிகள் ஏனையவர்களின் உடல்களை மீட்க முயல்கின்றனர் என நைஜீரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.எனினும் விபத்து இடம்பெற்று 12 மணித்தியாலத்தின் பின்னரும் எவரும் உயிருடன் மீட்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
உணவு சந்தையொன்றிற்கு சென்றுகொண்டிருந்த அதிகளவில் பெண்கள் காணப்பட்ட படகே விபத்துக்குள்ளாகியுள்ளது.அதிகளவானவர்கள் ஏற்றப்பட்டதால் படகு கவிழ்ந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நைஜீரியாவில் போதிய தரமான தரைவழிப்பாதைகள் இன்மையால் படகுகளில் மக்கள் நெரிசலாக பயணம் செய்வது வழமையான விடயம் என்பது குறிப்பிடத்தக்கது.படகு விபத்துக்குள்ளான பகுதியை கண்டுபிடிப்பதே பெரும் சவாலாக காணப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான விபத்துக்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருவது நைஜீரியாவில் கரிசனைக்குரிய விடயமாக மாறியுள்ளது.
ஆபிரிக்காவின் சனத்தொகை அதிகமான நாட்டில் பாதுகாப்பு கட்;டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதில் சவால்களை எதிர்கொண்டுள்ளனர்.
அதிகளவு மக்களை ஏற்றும் போதியளவு பராமரிக்கப்படுவதா படகுகள் காரணமாகவே இந்த விபத்துக்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான பயணங்களின் உயிர்காப்பு அங்கியை அணியச்செய்வதற்கு அதிகாரிகள் கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ள போதிலும் அது வெற்றியடையவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM