பதுளையில் தொடரும் மழை, பலத்த காற்று! - வீடுகளும் கூரைகளும் சேதம்!

30 Nov, 2024 | 06:12 PM
image

பதுளையில் பலத்த மழை, கடும் காற்றின் காரணமாக சுமார் 20 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன், 9 வீடுகளின் கூரைகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. 

மீதும்பிட்டிய "சீ" பிரிவுக்கு செல்லும் பாதையில் பாரிய மரங்கள் சரிந்து வீழ்ந்ததன் காரணமாக அந்த பகுதியில் வாகன போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. மரங்களை வெட்டி அகற்றிய பின்னர், தற்போது அங்கு போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது. 

பதுளை - கொழும்பு புகையிரத சேவையானது பண்டாரவளை புகையிரத நிலையத்துக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டு இடம்பெற்று வருகிறது.  

தெமோதரை மற்றும் உடுவரை புகையிரத நிலையங்களுக்கு இடையில் புகையிரத கடவையில் பல இடங்களில் ஏற்பட்டுள்ள மண்சரிவுகளை அகற்றும் பணிகள் இடம்பெற்று வருகிறது.

இன்னும் ஓரிரு நாட்களில் பதுளைக்கான புகையிரத சேவை வழமைக்கு திரும்பும் என புகையிரத நிலைய அதிகாரியொருவர் தெரிவித்தார். 

இதேவேளை, பதுளை மாவட்டத்தில் மழையினுடனான வானிலையில் மாற்றம் ஏற்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியிருந்த நிலையில் இன்றும் பரவலாக மழையுடனான வானிலை நிலவுகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கைதான 8 தமிழக மீனவர்களுக்கும் விளக்கமறியல் 

2024-12-08 17:05:54
news-image

யாழில் வெள்ள நிவாரணப் பொருட்களை இந்திய...

2024-12-08 16:45:05
news-image

கொழும்பில் செரிட்டி கடைத் தொகுதி -...

2024-12-08 16:39:09
news-image

மின்கட்டணத்தை 2/3 மடங்கால் குறைப்பதாகக் கூறிய...

2024-12-08 15:33:06
news-image

வன்முறைக்கு ஆளாகும் பெண்கள் தொடர்பில் கவனம்...

2024-12-08 15:39:23
news-image

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் சுதந்திர கட்சி...

2024-12-08 15:34:58
news-image

மின்கட்டணத்தை ஆறு மாதங்களுக்கு பேணுவதற்கு பரிந்துரை

2024-12-08 15:28:40
news-image

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் தேசிய மக்கள்...

2024-12-08 15:29:37
news-image

ஜா - எல பகுதியில் ஹெரோயினுடன்...

2024-12-08 15:31:51
news-image

வரக்காபொல பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர்...

2024-12-08 15:26:54
news-image

நுவரெலியா டிப்போவில் காவலாளி கொலை, பணம்...

2024-12-08 14:00:27
news-image

வவுனியாவில் வாள்வெட்டு - கொலை தொடர்பில்...

2024-12-08 13:49:24