வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு தற்காலிகமாக பாதுகாப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து அவர்களின் குறை நிறைகளை கேட்டறிந்து தீர்வு காண்பதற்காக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் இன்று சனிக்கிழமை (30) பல்வேறு நிலையங்களுக்குச் சென்று ஆய்வு செய்தார்.
இதன் போது கல்லுண்டாய் பகுதியில் ஏற்பட்ட வெள்ள நிலமைகளை ஆய்வு செய்து கல்லுண்டாய் தேசிய இளைஞர் சேவைகள் மன்றக் கட்டடத்தில் தங்கியுள்ள மக்களுடன் கலந்துரையாடி அவர்களின் குறை நிறைகளைக் கேட்டுக்கொண்டதுடன், உடனடியாக தீர்க்க கூடிய பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும் வழங்கினார்.
இதன் போது அனர்த்தத்திற்கு அப்பால் பொது மக்களால் முன்வைக்கப்பட்ட காணிப் பிரச்சனைக்கு, மாகாணக் காணி ஆணையாளருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கலந்துரையாடியதன் பின்னர், கல்லுண்டாயில் காணிக் கச்சேரி நடாத்துவதற்கான நடிவடிக்கைகளை விரைவில் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் ஊடாக எடுக்க ஆவன செய்வதாக பொது மக்களுக்குத் தெரிவித்தார்.
இந்த மக்கள் சந்திப்பில் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் சுபாஷினி மதியழகன் கலந்து கொண்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM