'டை நோ சர்ஸ்' எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமாகி பிரபலமான நடிகர் உதய் கார்த்திக் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ஃபேமிலி படம்' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'வழி விடு' எனும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் செல்வகுமார் திருமாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஃபேமிலி படம்' எனும் திரைப்படத்தில் உதய் கார்த்திக், சுபிக்சா காயரோகணம், விவேக் பிரசன்னா, பார்த்திபன் குமார், ஸ்ரீஜா ரவி, மோகன சுந்தரம், கவின் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிவீ இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை யு கே கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. பாலாஜி தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆறாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற'' பாதையின் முடிவில் பாய்ச்சல் வருமோ... எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த பாடலை பாடலாசிரியர் அஹ்மத் ஷ்யாம் எழுத, பின்னணி பாடகர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் விவேக் - மெர்வின் இணைந்து பாடியிருக்கிறார்கள். சுய முன்னேற்றத்தை மையமாக கொண்ட இந்த பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM