வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான வலிமையான நான்கு வரி மந்திரம் ..!

30 Nov, 2024 | 04:00 PM
image

இன்றைய திகதியில் எம்மில் பலரும் தங்களுக்கு தெரிந்த சூட்சமங்களை பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றியை காண்கிறார்கள். 

தொழிலதிபர்கள், அரசு உயரதிகாரிகள்.. என பலரும் தங்களுக்கென பிரத்யேகமான ஒரு சூட்சம வழிபாட்டை பின்பற்றி தொடர் வெற்றியை பெறுகிறார்கள்.

ஆனால் எம்மில் பலரும் இந்த சூட்சமங்களை அதாவது வெற்றி பெற்றவர்கள் பின்பற்றும் ரகசிய சூத்திரத்தை அறிந்து கொள்ளாமல்... அது தொடர்பாக ஆர்வம் காட்டாமல்... தங்களுக்கு தெரிந்த வழிகளில் மட்டுமே பயணித்து வெற்றி பெற நினைக்கிறார்கள்.

 இதனால் அவர்களுக்கு வெற்றி என்பது எளிதில் கிடைப்பதில்லை. வேறு சிலர் இரவு- பகல் என பாராமல் கடுமையாக உழைக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கும் முன்னேற்றம் என்பது ஒரு எல்லையுடன் நின்று விடுகிறது. 

தொடர்ந்து முன்னேற விரும்பினாலும் அவர்களுக்கு அது சத்தியமாவதில்லை. வேறு சிலர் இறை வழிபாடு - இறை நம்பிக்கை-  கடும் உழைப்பு - புத்திசாலித்தனம்-  சாமர்த்தியத்தனம்-  எந்த நேரத்தில் எதனை செய்ய வேண்டும் என்ற அனுபவ அறிவு - ஆகிய பல விடயங்களை ஒரே தருணத்தில் செயல்படுத்தி வெற்றி பெறுகிறார்கள்.  

தொடர் வெற்றியை பெறும் இவர்கள் அனைவரும் நாளாந்தம் காலையில் எழுந்ததும் நான்கு வரி மந்திரத்தை தங்களுக்குள் உச்சரித்துக் கொண்டு ஆற்றலை அதிகரித்துக் கொள்கிறார்கள் என்பது எம்மில் பலருக்குத் தெரியாது. 

எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் வலியுறுத்திய இந்த நான்கு வரி மந்திரத்தை அவர்களின் ஆசியுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

இந்த மந்திரத்தை நாளாந்தம் அதிகாலையில் குறிப்பாக பிரம்ம முகூர்த்தம் என குறிப்பிடப்படும் 3: 36  முதல் சூரிய உதயத்திற்கு மூன்று நிமிடத்திற்கு முன்பு வரை... உங்களுடைய உள்ளங்கையை பார்த்து ஒரு முறை உச்சரிக்க வேண்டும். 

 இந்த நான்கு வரி மந்திரத்தை நாளாந்தம் அதிகாலையில் எழுந்து கண்களை திறக்கும் தருணத்தில்.. உங்களது இரு கைகளையும் ஒன்றிணைத்து உள்ளங்கையை நன்றாக பார்த்து இந்த மந்திரத்தை உரக்க சொல்ல வேண்டும்.

 ஒரு முறை உரக்க சொல்லிய பிறகு உங்களுடைய நாளாந்த கடமையை தொடரலாம். இந்த மந்திரத்தை உச்சரிக்க தொடங்கிய 48 வது நாளிலிருந்து உங்களில் மாற்றம் ஏற்படத் தொடங்கி, முன்னேற்றத்தை நோக்கி வீறு கொண்டு பயணிப்பீர்கள்.

அந்த எளிமையான மற்றும் வலிமையான மந்திரம் இதுதான்...

''ஓம் நமச்சிவாய பரமேஸ்வராய

ஸஸி சேகராய நம

ஓம் பவாய குண சம்பவாய

சிவ தாண்டவாய நம ஓம் !''.

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செல்லப் பிராணியை எப்போது வாங்கலாம்?

2025-01-15 17:39:12
news-image

ஒவ்வொருவரும் நாளாந்தம் பின்பற்ற வேண்டிய ஆன்மீக...

2025-01-13 15:56:39
news-image

குலதெய்வத்தின் அருளை பெறுவதற்கு எளிமையான வழிமுறை..!?

2025-01-09 15:26:03
news-image

எதிர்மறை ஆற்றலை அழித்து செல்வத்தை குவிக்கும்...

2025-01-08 19:26:11
news-image

கல்வியில் தேர்ச்சி பெறுவதற்கான எளிய குறிப்புகள்..!?

2025-01-07 16:03:17
news-image

ஆகமி கிரகத்தின் அருளை பெறுவதற்கான சூட்சம...

2025-01-06 16:36:08
news-image

சொந்த வீட்டு கனவை நனவாக்கும் சூட்சம...

2025-01-05 17:49:20
news-image

நாம் அனைவரும் சாதிப்பதற்கான சூட்சம குறிப்பு..!?

2025-01-03 16:55:59
news-image

சனியின் தாக்கத்தை குறைக்கும் எள்ளுருண்டை !

2024-12-31 15:15:31
news-image

2025 ஆங்கில புத்தாண்டு சிறப்பு ராசி...

2024-12-30 17:51:14
news-image

கடனை தீர்ப்பதற்கு உதவும் நெல்லிக்காய்..!?

2024-12-30 13:02:21
news-image

விளக்கேற்ற பயன்படுத்தும் திரிகளின் மறைமுக ஆற்றல்கள்

2024-12-28 18:47:05