நடிகர்கள் விவேக் பிரசன்னா - பிரவீன் ராஜா கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் ' ரிங் ரிங் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதனை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர் சக்திவேல் இயக்கத்தில் உருவாகி வரும் ' ரிங் ரிங் ' எனும் திரைப்படத்தில் விவேக் பிரசன்னா, பிரவீன் ராஜா, சாக்ஷி அகர்வால், ஸ்வயம் சித்தா, டேனியல் அனி போப் , அர்ஜுனன், சஹானா , ஜமுனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
பிரசாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு வசந்த் இசை பேட்டை இசையமைத்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தை தியா சினி கிரியேஷன்ஸ் மற்றும் ரூல் பிரேக்கர்ஸ் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜெகன் நாராயணன் மற்றும் சக்திவேல் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்,
நான்கு தம்பதிகள் திருமணத்திற்கு பிறகு தங்களது செல்போன்களை மாற்றிக் கொள்கிறார்கள்.
வெவ்வேறு பின்னணியில் இருக்கும் இவர்கள் தங்கள் செல்போன்களை மாற்றிக் கொள்வதால் நடைபெறும் சுவாரசியமான சம்பவங்களை விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் விவரித்திருக்கிறோம்.
இந்தத் திரைப்படத்தை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் மூன்றாம் திகதி அன்று பட மாளிகையில் வெளியிட திட்டமிட்டு வருகிறோம்'' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM