சீன தூதுவர் இனவாதக் கருத்துக்களை விதைக்கக் கூடாது ; அரசுக்கு சார்பாக தமிழ் மக்களை திசை திருப்ப முயற்சி - கஜேந்திரகுமார் எம்.பி

30 Nov, 2024 | 05:36 PM
image

இலங்கைக்கான சீனத் தூதுவர் இலங்கையில் இடம்பெற்ற தேர்தல் முடிவுகள் தொடர்பில் முரண்பாடான தகவல்களை கூறுவது ஏற்கக்கூடிய விடயமல்ல என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், 

அண்மையில் சீனத் தூதர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட நிலையில் தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்துவிட்டார்கள். இரண்டு தரப்புக்களும் ஒன்றிணைந்து செயற்பட ஆரம்பித்துவிட்டன என கருத்துக் கூறியிருந்தார். 

இந்தக் கருத்தை எமது கட்சி கண்டிப்பதோடு இலங்கையில் உள்ள வெளிநாட்டுத் தூதுவர் ஒருவர் இவ்வாறு கருத்து கூறுவது நாகரிகமான செயல் அல்ல என்பதோடு அவ்வாறான கருத்தை தூதுவர் ஒருவர் கூறக்கூடாது. 

உண்மையில் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்திக்கு தமிழ் மக்கள் ஆதரவு வழங்கிவிட்டார்கள் என கூற முடியாத நிலையில், சீனா தூதுவர் எந்த அடிப்படையில் அவ்வாறான கருத்தை முன்வைத்தார் என்பது தொடர்பில் கேட்க விரும்புகிறேன். 

தேசிய மக்கள் சக்திக்கு யாழ். தேர்தல் தொகுதியில் மூன்று ஆசனங்கள் கிடைக்கப்பெற்றது. மூன்றாவது ஆசனம் சுயேச்சை குழுக்கள் திட்டமிட்ட முறையில் தமிழ் மக்களின் வாக்குகளை பிரித்ததால் அந்த ஆசனம் கிடைத்தது. 

இம்முறை இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் சுமார் ஒன்றரை இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. 

கடந்த பாராளுமன்ற தேர்தலில் தெற்கை பிரதிநிதித்துவப்டுத்தி களமிறங்கிய அங்கஜன், டக்ளஸ் போன்றோர் பெற்ற வாக்குகளை விட இம்முறை தேசிய மக்கள் சக்தி சுமார் 15,000 வாக்குகள் குறைவாகப் பெற்றுள்ளது.

தெற்கு கட்சிகளுக்கு தொடர்ச்சியாக வாக்களிக்கும் ஒரு பகுதியினர் அங்கஜன், டக்ளஸை நிராகரித்து தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்துள்ளமையே உண்மையான விடயம். 

இவற்றை அறியாத சீனத் தூதுவர் தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்பட தயாராகிவிட்டனர் என்ற கருத்தை கூறுவது, ஒன்றில் கேட்ட கேள்விக்கான விளக்கம் என்னால் கூறப்பட்ட பதிலாக இருக்க வேண்டும் அல்லது தமிழ் மக்களை வேண்டுமென்றே தவறான பாதையில் இட்டுச் செல்வதாக பார்க்க முடியும். 

தமிழ் மக்கள் நீண்ட காலமாக தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளுக்கு தமது ஆதரவை கொடுத்து வரும் நிலையில் அவர்களின் கோரிக்கை தொடர்பில் சீன தூதுவர் அரசாங்கத்துக்கு எடுத்துக் கூற வேண்டும்.

அதை விடுத்து, பூலோக அரசியல் போட்டி காரணமாக சீனா தமது ஆதிக்கத்தை அதிகரிப்பதற்காக இனவாத கருத்துக்களை தெரிவிப்பது ஆரோக்கியமான விடயமல்ல.

ஆகவே, உலக வல்லரசில் ஒன்றாக சீனா, அதன் இலங்கைக்கான தூதுவர் தனது தூதுவர் பதவிக்கு பொருத்தமில்லாத விடயங்களில் தலையிடுவதும் தமிழ் மக்கள் மத்தியில் இனவாத கருத்துக்களை விதைப்பதையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் வெள்ள நிவாரணப் பொருட்களை இந்திய...

2024-12-08 16:45:05
news-image

கொழும்பில் செரிட்டி கடைத் தொகுதி -...

2024-12-08 16:39:09
news-image

மின்கட்டணத்தை 2/3 மடங்கால் குறைப்பதாகக் கூறிய...

2024-12-08 15:33:06
news-image

வன்முறைக்கு ஆளாகும் பெண்கள் தொடர்பில் கவனம்...

2024-12-08 15:39:23
news-image

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் சுதந்திர கட்சி...

2024-12-08 15:34:58
news-image

மின்கட்டணத்தை ஆறு மாதங்களுக்கு பேணுவதற்கு பரிந்துரை

2024-12-08 15:28:40
news-image

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் தேசிய மக்கள்...

2024-12-08 15:29:37
news-image

ஜா - எல பகுதியில் ஹெரோயினுடன்...

2024-12-08 15:31:51
news-image

வரக்காபொல பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர்...

2024-12-08 15:26:54
news-image

நுவரெலியா டிப்போவில் காவலாளி கொலை, பணம்...

2024-12-08 14:00:27
news-image

வவுனியாவில் வாள்வெட்டு - கொலை தொடர்பில்...

2024-12-08 13:49:24
news-image

சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் கட்டுநாயக்கவில் இரு பெண்கள்...

2024-12-08 16:28:10