வவுனியாவில் கடற்படை லெப்டினன்ட் தர அதிகாரியொருவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (29) இடம்பெற்றதாக பூனாவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த அதிகாரி பணி நிமித்தமாக கொழும்புக்கு சென்றுவிட்டு, பேருந்தில் பூனாவ கடற்படை முகாமுக்கு திரும்பியுள்ளார்.
பேருந்திலிருந்து இறங்கி தான் கடமையாற்றும் முகாமுக்கு சென்றுகொண்டிருந்தபோதே யானை தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பூனாவ கடற்படை முகாமில் கடமையாற்றி வந்த மத்தலான, நிட்டம்புவவில் வசிக்கும் கடற்படை வீரரே உயிரிழந்துள்ளார்.
யானை தாக்கியதில் பலத்த காயமடைந்தவரை கடற்படையினரும் உள்ளூர் மக்களும் இணைந்து வவுனியா மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM