செட்டிக்குளத்தில் இளம் குடும்பப் பெண் தீயில் எரிந்து உயிரிழப்பு!

Published By: Digital Desk 2

30 Nov, 2024 | 04:52 PM
image

வவுனியா, செட்டிக்குளம் பகுதியில் இளம் குடும்பப் பெண் தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (29) இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

செட்டிகுளம், பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 29 வயது பெண்ணே உயிரிழந்துள்ளார்.

வவுனியா, செட்டிக்குளம், பெரியகுளம் பகுதியில் வசித்து வந்த இந்தப் பெண் வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரிந்த நிலையில், அயலவர்களால் மீட்கப்பட்டு செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக நாளாந்தம் ...

2024-12-08 18:10:44
news-image

வவுனியாவில் பொலிஸார் திடீர் சோதனை :...

2024-12-08 18:22:03
news-image

கைதான 8 தமிழக மீனவர்களுக்கும் விளக்கமறியல் 

2024-12-08 17:05:54
news-image

புத்தளத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

2024-12-08 17:25:01
news-image

யாழில் கைப்பற்றப்பட்ட 44 கேரள கஞ்சாப்...

2024-12-08 17:20:37
news-image

யாழில் வெள்ள நிவாரணப் பொருட்களை இந்திய...

2024-12-08 16:45:05
news-image

கொழும்பில் செரிட்டி கடைத் தொகுதி -...

2024-12-08 16:39:09
news-image

மின்கட்டணத்தை 2/3 மடங்கால் குறைப்பதாகக் கூறிய...

2024-12-08 15:33:06
news-image

வன்முறைக்கு ஆளாகும் பெண்கள் தொடர்பில் கவனம்...

2024-12-08 15:39:23
news-image

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் சுதந்திர கட்சி...

2024-12-08 15:34:58
news-image

மின்கட்டணத்தை ஆறு மாதங்களுக்கு பேணுவதற்கு பரிந்துரை

2024-12-08 15:28:40
news-image

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் தேசிய மக்கள்...

2024-12-08 15:29:37