நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ; இளைஞன் பலி

30 Nov, 2024 | 12:58 PM
image

மஹரகம - பமுனுவ வீதியில் பமுனுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (29) மாலை இடம்பெற்றுள்ளது.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் வாகனம் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த காருடன் மோதி பின்னர் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் செலுத்துனரும் முச்சக்கரவண்டியின் சாரதியும் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

உயிரிழந்தவர் பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞன் ஆவார். 

இதனையடுத்து ஜீப் வாகனத்தின் சாரதி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வடக்கு, கிழக்கில் அதிக மழைக்கான வாய்ப்பு...

2024-12-11 06:58:02
news-image

அடுத்த வருடம் கடுமையான மருந்து தட்டுப்பாடு...

2024-12-10 18:38:50
news-image

ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போதான இராஜதந்திர...

2024-12-10 18:42:50
news-image

ரணில் அரசாங்கத்தின் சகாக்களின் மதுபானசாலைகளிலிருந்து 7...

2024-12-10 18:41:56
news-image

சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள், விசேட...

2024-12-10 18:33:17
news-image

அரசாங்கம் தம்மீதான நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டும்...

2024-12-10 17:11:35
news-image

அர்ச்சுனா இராமநாதன் எம்.பி. தொடர்பில் நீதிமன்றுக்கு...

2024-12-10 18:31:30
news-image

'அரகலய' போராட்டத்தின் பின்னரான மக்களின் புரிதல்...

2024-12-10 17:26:59
news-image

அரிசி தட்டுப்பாட்டுக்கு உடன் தீர்வுகாண வேண்டிய...

2024-12-10 18:36:51
news-image

வர்த்தமானிக்கு அமையவே அரிசி உற்பத்தியாளர்கள் விற்பனை...

2024-12-10 17:13:00
news-image

மின் கட்டணத்தை 33 சதவீதத்தால் குறைக்க...

2024-12-10 18:28:09
news-image

விவசாயம், குரங்கு உள்ளிட்ட விலங்குகளைப் பாதுகாக்க...

2024-12-10 15:37:41