தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் அரச துறையில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது என வெரிட்டே ரிசேர்ச்சின் publicfinance.lk ஆய்வினூடாக தகவல் வெளியாகியுள்ளது.
வெரிட்டே ரிசேர்ச் மேற்கொண்ட ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
2023ஆம் ஆண்டில் மொத்த தொழிற்படையான 8 மில்லியனில் 1.16 மில்லியன் பேர் அதாவது 15 வீதமானோர் மத்திய அரசாங்கம், துணைத் தேசிய அலகுகள் மற்றும் இராணுவம் உட்பட அரச துறையில் பணிபுரிந்துள்ளனர். குறிப்பாக, மொத்த அரச உத்தியோகத்தர்களில் மூன்றில் ஒரு பங்கினர் பாதுகாப்பு மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு துறையில் பணியாற்றுகின்றனர்.
ஒப்பீட்டு ரீதியில், பிராந்தியத்தில் உள்ள ஒரே மாதிரியான பொருளாதார அமைப்புகளைக் கொண்ட நாடுகளில் மிகக் குறைவான அரச உத்தியோகத்தர்களே பணிபுரிகின்றனர்.
தமது தொழிற்படையில் இந்தியா 9 வீதமும் வியட்நாம் 8 வீதமும் பங்களாதேஷ் 5 வீத உத்தியோகத்தர்களை மட்டுமே அரச துறையில் பயன்படுத்துகின்றன.
அரச துறைக்கு குறைந்த ஊதியம் வழங்கப்பட்டாலும், இதன் காரணமாக அதிக செலவு ஏற்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கம் 940 பில்லியன் ரூபாவினை அதன் மீண்டெழும் பாதீட்டில் 20 வீதத்தையும் அதன் வருமானத்தில் 31 வீதத்தையும் அரச துறை சம்பளங்களுக்காகச் செலவிட்டுள்ளது.
கடந்த தசாப்தத்தில் அரச செலவினத்தில் சராசரியாக 23 வீதம் சம்பளங்களுக்காகச் செலவிடப்பட்டுள்ளதுடன் சுகாதாரம், கல்வி மற்றும் உட்கட்டமைப்பு போன்ற முக்கிய துறைகளுக்கு வரையறுக்கப்பட்ட நிதியே எஞ்சியுள்ளமை ஆய்வில் வெளிப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM