பாதாள உலக கும்பலின் தலைவரும் பிரபல போதைப்பொருள் கடத்தல் காரருமான “மிதிகம ருவன்” என்று அழைக்கப்படும் ஜயசேகர விதானகே ருவன் சாமர என்பவரை எதிர்வரும் டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை (29) உத்தரவிட்டுள்ளது.
“மிதிகம ருவன்” என்பவர் பாதாள உலக கும்பலின் தலைவரும் பிரபல போதைப்பொருள் கடத்தல் காரருமான “ஹரக் கட்டா”வின் மனைவியின் சகோதரன் ஆவார்.
இவர் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என்பதுடன் “ஹரக் கட்டா” குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து தப்பிச் செல்வதற்கு உதவி செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
“மிதிகம ருவன்” என்பவர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் துபாயில் வைத்து கைது செய்யப்பட்டுக் கடந்த மே மாதம் 31 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டு கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்துள்ளார்.
இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 04 ஆம் திகதி கல்கிசை நீதிமன்றத்தில் நபரொருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM