அஜித் குமார் நடிக்கும் 'விடாமுயற்சி' படத்தின் கிளர்வோட்டம் வெளியீடு

30 Nov, 2024 | 12:17 PM
image

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான அஜித்குமார் நடிப்பில் தயாராகி இருக்கும் 'விடாமுயற்சி' எனும் திரைப்படத்தின் கிளர்வோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

 யாரும் எதிர்பாராத தருணத்தில் அதாவது இப்படத்தின் கிளர்வோட்டம் வெளியாகும் என்ற எந்த அறிவிப்பும் வெளியிடப்படாமல் ..இப்படத்தின் கிளர்வோட்டத்தை திடீரென்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

இருப்பினும் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ஆறு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.

இயக்குநரும், நடிகருமான மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் 'விடாமுயற்சி' எனும் திரைப்படத்தில் அஜித் குமார், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசண்ட்ரா, ஆரவ், நிகில் நாயர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

 ஓம் பிரகாஷ் மற்றும் நீரவ் ஷா ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். 

எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரித்திருக்கிறார்.

பொங்கலுக்கு வெளியாகும் என்று ஒரு பிரிவினரும்... பொங்கலுக்கு வெளியாகாது வேறொரு திகதியில் தான் வெளியாகும் என்று மற்றொரு பிரிவினரும் .. இப்படத்தின் வெளியீடு குறித்து செய்திகளை வெளியிட்டு வரும் தருணத்தில்.. திரையுலகில் நடைபெற்ற ரகசிய பேச்சு வார்த்தைக்கு பிறகு இத்திரைப்படத்தின் கிளர்வோட்டம் இரவோடு இரவாக வெளியிடப்பட்டிருக்கிறது. 

அந்த வகையில் இந்த திரைப்படம் எதிர்வரும் ஜனவரி மாதம் பொங்கல் திருவிழா நாளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 இந்த திரைப்படத்தின் கிளர்வோட்டதில் அஜித் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய காட்சிகள் இடம் பிடித்திருந்தாலும்... ''எல்லோரும்... எல்லாமும்... கைவிடும் போது.. உன்னை நம்பு 'என சுயமுன்னேற்றத்திற்கான ஊக்கமளிக்கும் உரையாடல் இடம் பிடித்திருப்பதால்.. அனைத்து தரப்பு ரசிகர்களின் கவனத்தையும் கவர்ந்திருக்கிறது. பொங்கலுக்கு இப்படம் வெளியாவதால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்து இருக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெற்றிமாறனின் 'விடுதலை 2' படத்தின் பின்னணி...

2024-12-07 17:19:24
news-image

'இசை அசுரன்' ஜீ .வி பிரகாஷ்...

2024-12-07 17:18:13
news-image

இந்திய சினிமா வரலாற்றில் புதிய வசூல்...

2024-12-07 17:17:57
news-image

சசிகுமார் நடிக்கும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' எனும்...

2024-12-07 17:18:28
news-image

நடிகர் ஸ்ரீராம் கார்த்திக் நடிக்கும் 'மெசன்ஜர்...

2024-12-07 17:19:04
news-image

'பிக் பொஸ்' பாலாஜி முருகதாஸ் நடிக்கும்...

2024-12-07 17:20:01
news-image

'புஷ்பா 2 - தி ரூல்'-...

2024-12-06 17:28:33
news-image

ஃபேமிலி படம் - திரைப்பட விமர்சனம்

2024-12-06 17:03:21
news-image

டிஜிட்டல் தள பார்வையாளர்களிடத்தில் வரவேற்பு பெற்ற...

2024-12-06 15:52:35
news-image

நடிகர் குரு சோமசுந்தரம் நடிக்கும் 'போத்தல்...

2024-12-04 17:22:59
news-image

மெகா ஸ்டார்' சிரஞ்சீவியை இயக்கும் இயக்குநர்...

2024-12-04 17:23:34
news-image

'இசை ஞானி' இளையராஜா இசையில் திரைப்படமாக...

2024-12-04 17:22:18